Headlines|நூல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் To விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு வரை!
மக்கள் விரோத ஆட்சியாளர்களின் கூட்டணி கணக்குகளை 2026 தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் ஆவேசம்.
அம்பேத்கர் விழாவுக்கு கூட திருமாவளவன் வராதது ஏன் என கேள்வி எழுப்பிய விஜய், கூட்டணி கட்சிகளின் அழுத்தம் நன்றாகவே புரிவதாகவும் பேச்சு.
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும் என தமிழ்நாட்டை கருத்தியல் தலைவர் தான் ஆள வேண்டும் என்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் ஆர்ஜூனா பேச்சு.
கூட்டணி கட்சிகளிடம் இருந்து எந்த அழுத்தமும் இல்லை என திருமாவளவன் விளக்கம் திமுக கூட்டணியில் தான் தொடர்வோம் என்றும் உறுதி.
கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜூனா பேசி வருவது உண்மை தான் என்றும், உரிய விளக்கம் கேட்கப்படும் எனவும் திருமாவளவன் பதில்.
திருமாவளவனின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டு விட்டதாக தமிழிசை விமர்சனம்.மேலும், திமுக கூட்டணியில் பிளவு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கருத்து.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு 944 கோடியே 80 லட்சம் ரூபாய் விடுவிக்க ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு. மேலும், மத்தியக்குழு ஆய்வுக்கு பிறகு கூடுதல் நிதி வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் தகவல்.
புயல் பாதிப்பை ஆய்வு செய்ய வந்த மத்தியக் குழுவுடன் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை. தமிழகத்துக்கு ஆறாயிரத்து 675 கோடியை வழங்க பரிந்துரைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்.
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு. வரும் 11ஆம் தேதி காவிரி படுகை உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்த்தரப்பு சாட்சிகளாக எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விசாரிக்கலாம் என்று, நீலகிரி நீதிமன்றத்தின் தடை உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் ஆணை.
அதானியை முதல்வர் சந்திக்கவும் இல்லை....அவருடன் அரசு ஒப்பந்தம் போடவும் இல்லை என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை. அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை.
டெல்லியை நோக்கி நடைபயணமாக சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசிய காவல்துறை. இதனால், 6 பேர் காயம் அடைந்த நிலையில் பேரணியை வாபஸ் பெறுவதாக விவசாயிகள் அறிவிப்பு.
இந்திய எல்லையையொட்டிய பகுதிகளில் ஆளில்லாத விமானங்களை நிறுத்திய வங்கதேசம். மேற்குவங்க எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள விமானங்களை கண்காணித்து வருவதாக இந்திய ராணுவம் விளக்கம்.
உள்நாட்டுப் போர் நிலவும் சிரியாவுக்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என மத்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்.
காசாவின் வடக்குப் பகுதியில் இருக்கும் முக்கிய மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல். தொடர் வான் தாக்குதலால் 29 பேர் உயிரிழந்த சோகம்.
அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் 180 ரன்களுக்கு இந்திய அணி ஆல்-அவுட். முதல் நாள் முடிவில் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா.