புதிய உச்சத்தில் தங்கம் விலை.. 2 நாட்களில் சவரனுக்கு ரூ.6,400 அதிகரிப்பு.. வெள்ளியும் உயர்வு!
தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இன்று காலை சவரனுக்கு 2,800 ரூபாய் அதிகரித்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டு வருவதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்
சர்வதேச காரணிகளே தங்கம், வெள்ளி விலையை தீர்மானிக்கின்றன. எப்போதெல்லாம் சர்வதேச அளவில் அரசியல் பதற்றங்கள், பொருளாதார நிச்சயமற்ற சூழல் உருவாகிறதோ, அப்போதெல்லாம் தங்கம் விலை உயர்வது வழக்கம். முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டைப் பாதுகாக்க தங்கத்தில் முதலீடு செய்வதால், அதற்கான தேவை அதிகரித்து விலை உயர்கிறது. வெள்ளி பெரும்பாலும் தொழில் பயன்பாட்டுக்கானது. மின்வாகனம், சோலார் பேனல் தயாரிப்புகளால் வெள்ளிக்கான தேவை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை வேகமாக உயர்வதால், முதலீட்டாளர்கள் தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளியில் முதலீடு செய்யும் போக்கும் உருவாகியுள்ளது.
அந்த வகையில், தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இன்று காலை சவரனுக்கு 2,800 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 6,400 ரூபாய் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை தொடர்ந்து உச்சத்திலேயே விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 340 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டு வருவதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இனி, சாமானியர்கள் நகையே வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

