அமலுக்கு வந்த குடியுரிமை திருத்த மசோதா முதல் போரிஸ் ஜான்சன் முன்னிலை வரை #TopNews

அமலுக்கு வந்த குடியுரிமை திருத்த மசோதா முதல் போரிஸ் ஜான்சன் முன்னிலை வரை #TopNews

அமலுக்கு வந்த குடியுரிமை திருத்த மசோதா முதல் போரிஸ் ஜான்சன் முன்னிலை வரை #TopNews
Published on

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் போராட்டம். காவல் துறையின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு.

விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை. கடன் தொல்லையால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக தகவல். நகை செய்யும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், கடன் வாங்க காரணம் என வீடியோ பதிவு. 3 நம்பர் லாட்டரிச் சீட்டை ஒழிக்க வேண்டும் என தற்கொலைக்கு முன் பேச்சு.

நித்யானந்தா இருக்குமிடத்தை வரும் 18-ந்தேதிக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று வழக்கு ஒன்றில் கர்நாடக காவல்துறைக்கு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்தவர் திருச்சியில் கைது. போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. வடகிழக்கு பருவமழை கூடுதலாக பதிவாகி உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதி ஹஃபீஸ் சயீத் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

பிரிட்டனில் நடைபெற்றத் தேர்தலில் மொத்தமுள்ள 650 இடங்களில் 368 இடங்களில் முன்னிலை பெற்று பிரதமர் போரிஸ் ஜான்சன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்காக இரு அணிகளும் சென்னை வந்தன. வெஸ்ட் இண்டீஸ் இந்தியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஞாயிற்றுகிழமை சென்னையில் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com