நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு எனத் தகவல். 2022ம் ஆண்டு 75வது சுதந்தர தினத்தை தொடர்ந்து புதிய கட்டிடத்தில் நாடாளுமன்றத்தின் முதல் தொடர் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமது அரசின் முதல் 100 நாட்கள் ட்ரெய்லர் மட்டுமே.முக்கிய காட்சிகள் இனிமேல்தான் வரும். விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்து பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் இளம்பெண் உயிரிழப்பு. சாலையில் அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது.
தகுந்த காரணங்களை கொண்டே நீதிபதிகள் பணியிட மாற்றம். சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இடமாற்ற சர்ச்சை எழுந்த நிலையில் கொலிஜியம் விளக்கம் அளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் பாசாங்கரையில் முதியவர் இருளப்ப சாமி ஜீவ சமாதி அடையும் நிகழ்வு ஒத்திவைப்பு. முக்தி அடையும் நேரம் கடந்து விட்டதால் ஜீவ சமாதி முடிவு ஒத்திவைப்பு என ஏற்பாட்டாளர்கள் தகவல்.
சேலம் அருகே இளம்பிள்ளையில் ஏரி உடைந்து 300 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பீரோ, கட்டில்களுடன் விசைத்தறிகளும் நீரில் மூழ்கின.
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு. கே.எல்.ராகுல் நீக்கப்பட்டு, ஷுப்மான் கில் சேர்க்கப்பட்டுள்ளார்.