இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்

Headlines | கடும் விமர்சனங்களுக்கு விஜய் அளித்த விளக்கம் முதல் இஸ்ரேல் மீதான தீவிர தாக்குதல் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, கடும் விமர்சனங்களுக்கு விளக்கமளித்த விஜய் முதல் இஸ்ரேல் மீது தீவிர தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா அமைப்பு வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
Published on
  • தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்களால், நேற்று நள்ளிரவை தாண்டியும் கிளாம்பாக்கத்தில் குறையாத கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

  • தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னுக்கு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில், பாதுகாப்பு பணிகளுக்கு 10 ஆயிரம் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளது.

  • அரசியலைத் தொடங்கும் முன்னரே விமர்சித்தவர்கள், இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள் என மாநாட்டைத் தொடர்ந்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு விஜய் விளக்கமளித்துள்ளார்.

  • புதுக்கோட்டை நகைக்கடையில் போலி ஹால்மார்க் முத்திரையுடன் தங்கம் விற்பனை செய்யப்பட்டநிலையில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்து பி.ஐ.எஸ். அதிகாரிகள் நடவடிக்கை.

  • புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் காவல்துறையினர் பதவியை இழக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரிக்கை.

  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரன் அளித்த வாக்குமூலம் வெளியானது. அதில், தனது மகனின் அரசியல் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததால் ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல திட்டமிட்டதாக தகவல்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
அடுத்த தீபாவளி.. வரலாறு காணாத அளவுக்கு உயரப்போகும் தங்கத்தின் விலை... எவ்வளவு தெரியுமா?
  • “புதிய திரைப்படங்களுக்கான வேலைகளை தொடங்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. அதேநேரம் பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது” என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு.

  • கேரளாவில் கோயில் திருவிழாவின் போது பட்டாசு விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவத்தில், கோயில் நிர்வாக தலைவர் உட்பட 3 பேர் கைது.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
கேரளா கோவிலில் பயங்கர தீ விபத்து; 150 பேர் படுகாயம்... 8 பேர் கவலைக்கிடம்!
  • தெலங்கானாவில் நவம்பர் 6 ஆம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனவும், இதில், 80 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு.

  • ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவரானார் நயம் காஸிம்; பொறுப்பேற்றவுடன் இஸ்ரேல் மீது தீவிர ஏவுகனை தாக்குதல்.

  • நியூஸிலாந்துக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அசத்தல் வெற்றி. 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி.

  • தவெக மாநாட்டு பாதுகாப்பு பணிக்காக சென்ற விழுப்புரத்தை சேர்ந்த காவலர் சத்தியமூர்த்தி விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவருடைய குடும்பத்திற்கு ரூ.25 லட்சத்தை நிதியுதவியாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com