\
சுய உதவிக் குழு பெண்களோடு பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்

சுய உதவிக் குழு பெண்களோடு பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்

சுய உதவிக் குழு பெண்களோடு பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்
Published on
நாடு முழுவதும் உள்ள சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்களிடம் இன்று பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாட உள்ளார்.
மேலும், நாடு முழுவதும் உள்ள நான்கு லட்சம் சுய உதவிக்குழுக்களுக்கு உதவி புரியும் வகையில் ஆயிரத்து 625 கோடி ரூபாய் நிதியையும் பிரதமர் விடுவிக்கவுள்ளார். மேலும், உணவு பதப்படுத்துதல் துறை வகுத்த திட்டத்தின் கீழ் 7 ஆயிரத்து 500 சுய உதவிக் குழு பெண்களுக்கு 25 கோடி ரூபாய் ஆதார நிதி உதவியாக வழங்கவுள்ளார். வேளாண் உற்பத்தி அமைப்புகளின் வளர்ச்சிக்காக நான்கு கோடியே 13 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படவுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com