டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு இன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுநீரக கோளாறு மற்றும் நோய் தொற்றால் அவதிப்பட்டு வரும் அருண் ஜேட்லி, கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக அரசு அலுவல்கள் எதிலும் பங்கேற்கவில்லை. மாநிலங்களவை எம்.பி.யாக அவர் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அதற்கான பதவியேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. இந்தச் சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பிரபல சிறுநீரக மருத்துவ நிபுணர் சந்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவ குழுவினர் ஜேட்லிக்கு இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.