HEADLINES : பாக். மீண்டும் தாக்குதல் முதல் நாதகவிற்கு சின்னம் ஒதுக்கீடு வரை
இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.... அறிவார்ந்த முறையில் செயல்பட்ட இருநாடுகளுக்கும் நன்றி என பதிவு...
தாக்குதல் நிறுத்தத்தை மீறி இந்திய எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்... பாகிஸ்தானின் ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு....
மீண்டும் இருளில் மூழ்கிய இந்திய எல்லையோர நகரங்கள்... ஜம்மு, பதான்கோட், பார்மர், ஃபெரோஸ்பூர் ஆகிய இடங்களில் முழுமையாக மின்விநியோகம் நிறுத்தம்...
தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக வெளியுறவுத் துறை செயலர் குற்றச்சாட்டு... மீண்டும் அத்துமீறினால் தகுந்த பதிலடி தரப்படும் எனவும் விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை....
ஜம்முவின் நாக்ரோட்டா ராணுவ மையம் அருகே மர்ம நபர் நடமாடியதாக ஏஎன்ஐ தகவல்... துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயம்...
அமிர்தசரஸ் மக்கள் சாலைகளிலும், வீட்டின் மாடிக்கும் செல்ல வேண்டாம்... கட்டுப்பாட்டு அறைக்கான உதவி எண்ணையும் வெளியிட்டு காவல் துறை அறிவுரை...
போர் இந்தியாவின் விருப்பம் அல்ல... சீன வெளியுறவுத் துறை அமைச்சரிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேச்சு...
இந்திய ராணுவத்தின் வீரம், தியாகத்தை போற்றும் வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி.... இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தத்தை வரவேற்று எக்ஸ் தளத்தில் முதல்வர் பதிவு....
இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டும்... இருநாடுகளுக்கும் சீனாவும், பிரிட்டனும் அறிவுறுத்தல் ...
நாட்டின் பாதுகாப்பிற்காக முப்படைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும்... இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதில் சமரசம் கிடையாது என ராணுவ அதிகாரி ரகு நாயர் திட்டவட்டம்...
கேரளாவில் முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. வரும் 27ஆம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
மாமல்லபுரம் அருகே பாமக சார்பில் இன்று சித்திரை முழு நிலவு இளைஞர் மாநாடு ... போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், இசிஆர் சாலையில் பயணத்தை தவிர்க்க காவல் துறை அறிவுறுத்தல்
நாம் தமிழர் கட்சிக்கு கலப்பை ஏந்திய விவசாயி சின்னம் ஒதுக்கீடு... தேர்தல் ஆணைய அறிவிப்பை எக்ஸ் தளத்தில் பகிந்த சீமான்...
பக்தர்கள் புடை சூழ அழகர் கோயிலில் இருந்து மதுரை வந்தார் கள்ளழகர்... சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி அழகரை வரவேற்கும் பக்தர்கள்...