#HeadlineNews இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி- இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா அணி

இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி முதல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா அணி வரை... இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்ஃபேஸ்புக்
  • தென்மேற்கு வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி. இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் காற்றழுத்த மண்டலமாக மாறும் என வானிலை மையம் கணிப்பு.

  • தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு. 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை.

  • பழனி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி. மேலும்,வால்பாறை மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

  • மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாவது கட்டமாக ஜூலை 15ஆம் தேதி தொடங்கவுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

  • சென்னை அம்பத்தூரில் சொமேட்டோ ஊழியரை துரத்தி துரத்தி தாக்கிய கும்பல். தம்பியுடன் ஏற்பட்ட மோதலால் அண்ணன் மீது தாக்குதல் என்று தெரியவந்துள்ளது.

  • நெல்லை பாபநாசம் அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த இரண்டாவது சிறுத்தையை கூண்டு வைத்து லாவகமாக பிடித்தது வனத்துறை.

  • ஆந்திராவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்திய ஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் மீது தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி காவல்துறை வழக்குப்பதிவு.

  • அணு ஆயுதங்களுடன் பயிற்சி பெறும் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லைக்கு அருகே ஒத்திகையில் ஈடுபட்டதால் பதற்றம்.

  • ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா அணி. இதன்படி, முதல் குவாலிஃபயர் போட்டியில் ஹைதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி.

  • இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் ஹைதராபாத் அணியுடன் மோதப்போவது யார்?. எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் - பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com