தலைப்புச்செய்திகள்| குற்றால அருவியில் காட்டாற்று வெள்ளம்- சிறுவன் பலி To நடக்குமா CSK vs RCB போட்டி?

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது|காட்டாற்று வெள்ளத்தில் பலியான 17 வயது சிறுவன் முதல் மழைக் காரணமாக நெல்லை விரைந்த பேரிடர் மீட்புக்குழு வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
தலைப்புச்செய்திகள்
தலைப்புச்செய்திகள்முகநூல்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

  • தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளநிலையில், நெல்லை மாவட்டத்துக்கு மாநில பேரிடர் மீட்புக்குழு விரைந்ததுள்ளது.

  • குற்றால அருவியில் திடீரென பேரிரச்சலுடன் காட்டாற்று வெள்ளம் பாய்ந்ததில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் சடலமாக மீட்பு.

  • தென்காசி மாவட்ட அணை பகுதிகள்,அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.

  • புதுக்கோட்டை அருகே கனமழையின்போது மின்னல் தாக்கி 24 வயது இளைஞர் உயிரிழப்பு.மேலும், உடுமலை திருமூர்த்தி மலைக்கோயிலில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு.

  • புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகியுள்ளதாக ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு மீது துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு.

  • காங்கிரசும், சமாஜ்வாதியும் தேர்தலில் வெற்றி பெற்றால் ராமர் கோயில் மீது புல்டோசர் ஏற்றுவார்கள் என உத்தரப்பிரதேசத்தில் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி பேச்சு.

  • ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு நரேந்திர மோடி பிரதமராக தொடரமாட்டார் என ராய்பரேலி பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பேச்சு.

  • தைவான் நாடாளுமன்றத்தில் அரசுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்ட எம்பிக்கள்.

  • ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா சென்னை அணி?. இன்றைய கடைசி லீக் போட்டியில் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை.

  • என்றைக்காவது ஒருநாள் தமிழீழம் மலர்ந்தே தீரும் எனவும், திரையைவிட தரையில் வீரத்தை காட்டுபவர்தான் உண்மையான சூப்பர் மேன் என்றும் நடிகர் சத்யராஜ் நம்பிக்கை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com