தலைப்புச் செய்திகள் | ஒரே பயணச்சீட்டு நடைமுறை முதல் பிரதமர் மோடியின் வேட்பு மனு தாக்கல் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஒரே பயணச்சீட்டு நடைமுறை முதல் பிரதமர் மோடியின் வேட்பு மனு தாக்கல் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
 • வாரணாசியில் போட்டியிட கங்கையை வழிபட்ட பின் வேட்புமனுத் தாக்கல் செய்தார் பிரதமர் மோடி. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு ரூபாய் 3 கோடியே 2 லட்சம் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தகவல.

 • அமேதி மற்றும் ராய்பரேலி தொகுதிகளோடு உணர்வுபூர்வமான தொடர்புகளை கொண்டுள்ளோம் என காணொளி வெளியிட்டுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி - நரேந்திர மோடி
ராகுல் காந்தி - நரேந்திர மோடிFile image
 • திருப்பதியில் வாக்கு எண்ணும் மையத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதில், வாகனங்களுக்கு தீ வைக்காப்பட்டதால், இதனை தடுத்து நிறுத்த காவல்துறை தடியடி நடத்தியது.

 • திருப்பூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் மின்தடை ஏற்பட்டதால், சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்ததால் கட்சியினர் அதிர்ச்சி.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
’CSK-லிருந்து வெளியேறுங்கள்’- இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு Fleming-ஐ குறிவைக்கும் BCCI
 • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கோடை மழை. மேலும் நான்கு நாள்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

 • ஒரே பயணச்சீட்டில் மாநகரப் பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் வசதி டிசம்பரில் நடைமுறைக்கு வரும் என சென்னை போக்குவரத்துக் குழும அதிகாரிகள் தகவல்.

 • மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில், ஒரு பெண் உள்பட 4பேர் உயிரிழப்பு.

 • ரஃபாவில் இருந்து 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறினர்.மேலும் இங்கு இஸ்ரேல் நடத்தியதாக்குதலில் இந்தியர் உயிரிழப்பு

 • ஐபிஎல் தொடரில் லக்னோவை வீழ்த்தியது டெல்லி அணி. இதன்மூலம், புள்ளிகள் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

 • உணவுக்கு முன் அல்லது பின் தேநீர் மற்றும் காபி அருந்துவது உடலுக்கு தீங்கினை ஏற்படுத்தும் என ஐ.சி.எம்.ஆர். எச்சரித்துள்ளது.

 • மோட்டார் வாகனங்களில் உரிய அனுமதியின்றி அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள் செய்வது சட்டப்படி குற்றம் என அரசு எச்சரித்துள்ளது.

 • புதுச்சேரி கல்லூரிகளில் தமிழ்ப் பாட வகுப்புகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் புதுச்சேரி அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 • தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 4 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com