தலைப்புச் செய்திகள்|13 மாநிலங்களில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு To மோசமான சாதனை படைத்த மோகித் சர்மா!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது ராகுல் காந்தியின் 16 லட்சம் கோடி கடன் சர்ச்சை பேச்சு முதல் மோசமான சாதனையை படைத்த மோகித் சர்மா வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
தலைப்புச் செய்திகள்
தலைப்புச் செய்திகள்முகநூல்
 • கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் நாளை 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைப்பெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கான இறுதிக் கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக இறங்கியுள்ளது.

 • இந்தியா கூட்டணிக் கட்சிகள் பிரதமர் நாற்காலியை ஏலம் விடுவதாகவும், ஒரு ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்பதே இந்தியா கூட்டணியின் திட்டம் எனவும் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி விமர்சனம்.

 • பிரதமர் தனது பணக்கார நண்பர்களின் 16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளதாகவும், நாட்டு மக்கள் மோடியை மன்னிக்க மாட்டார்கள் எனவும் ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

 • மதுபான வழக்கில் கைதான கவிதாவின் பிணை மனு மீதான உத்தரவு மே 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டநிலையில், மறுஆய்வு மனுவை கவிதா தரப்பு நாளைதாக்கல் செய்ய உள்ளதாக தகவல்.

 • ஒப்புகைச் சீட்டுகளை நூறு சதவிகிதம் சரிபார்க்க கோரும் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் புரோகிராம்களை மாற்ற முடியாது என தேர்தல் ஆணையம் விளக்கம்.

 • சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக விசாரணை செய்ய திருச்சி, தஞ்சாவூர் உட்பட 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

 • குரூப் தேர்வுகளுக்கான ஆண்டு அட்டவணையை திருத்தி வெளியிட்டது.இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி 6,244 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு ஜூன் 9ல் நடைபெறும் என அறிவிப்பு.

 • நியோமேக்ஸ் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டநிலையில், சொத்துக்களின் விபரம் உட்பட முக்கிய விவகாரங்கள் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை.

 • அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. குடிமராமத்து பணிகளை தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 • தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வட தமிழக உள்மாவட்டங்களில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என கணிப்பு.

 • ஆன்லைன் மற்றும் செல்போன் செயலி மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், விதிகளை மீறியதால் ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 • விருத்தாசலம் அருகே வேலை செய்த கடையில் கைவரிசை காட்டிய கடையில் இருந்து திருடி தனியாக வியாபாரம் செய்த 4 ஊழியர்கள் பேர் கைது.

 • மஞ்ஞும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் படத்தின் லாபத்தில் பங்கு தருவதாகக் கூறி 7 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தநிலையில்,அவர்மீது கேரளா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

 • கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவை புரட்டிப்போட்ட கனமழையால், ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்வு.

 • ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் போராடி தோல்வி ரிஷப் பண்டின் அதிரடியால் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி.

 • ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த மோகித் சர்மா. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்களில் 73 ரன்களை விட்டுகொடுத்த பரிதாபம்.

 • இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com