தலைப்புச் செய்திகள் | சித்திரை திருவிழாவில் இஸ்லாமியர்களின் ரோஸ்மில்க் முதல் SRH-ன் சிக்சர் மழை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது மதுரை சித்திரை திருவிழாவில் ரோஸ்மில்க் வழங்கிய இஸ்லாமியர்கள் முதல் நேற்றைய ஐபிஎல் போட்டி வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
தலைப்புச் செய்திகள்
தலைப்புச் செய்திகள்புதிய தலைமுறை
 • தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பரப்புரை ஓய்வடைகிற நிலையில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 • தோல்வி பயம் வந்துவிட்டதால்தான் பாஜகவின் தேர்தல் பரப்புரைகளை திமுக தடுப்பதாகவும், தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை தலைவிரித்தாடுவதாகவும் நெல்லை பரப்புரையில் பிரதமர் குற்றச்சாட்டு.

 • பிரதமராக தொடரமுடியாத அச்சத்தில் பிரிவினைவாதத்தை மோடி தூண்டுவதாகவும், பிரதமர் பதவியின் தரத்தையே அவர் தாழ்த்துவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.

 • ஒரே நாடு, ஒரே தலைவர் என்பது பன்முகத்தன்மை கொண்ட நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என வயநாடு தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

 • நாட்டில் உள்ள பெரும்பாலான எதிர்க்கட்சியினர் ஜெயிலிலும், பெயிலிலும் உள்ளதாக புதுச்சேரி பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா வாகனப் பேரணியில் பரப்புரை

 • ஆபத்துக் காலத்தில் உதவி செய்யாமல், தமிழக அரசை மத்திய பாஜக அரசு வாட்டி வதைப்பதாக குற்றச்சாட்டு கடலூர் மாவட்டம் நெய்வேலியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பரப்புரை

 • கறுப்பு பணத்தை வெளிநாடுகளில் பதுக்குவதை தடுக்க எடுக்கப்பட்ட சோதனை முயற்சியே தேர்தல் பத்திர திட்டம். அதில், எதிர்க்கட்சிகளே அதிக அளவில் நன்கொடை பெற்றுள்ளதாக பிரதமர் மோடி பேட்டி

 • “பாஜக தேர்தல் அறிக்கை நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வில்லன். செல்பி எடுப்பதற்கு கூட ஜிஎஸ்டி போடுவார்கள்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்.

தலைப்புச் செய்திகள்
“அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா?”-பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
 • தேர்தல் பத்திரம் மூலம் சூதாட்ட நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்ற ஒரே கட்சி திமுக என தேர்தல் பரப்புரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.

 • தேர்தலுக்கு தேர்தல் பிரதமர் மோடி நாடகம் செய்வதாக, கோபிசெட்டிபாளையம் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்.

 • தேர்தல் பரப்புரையில் இந்தியா கூட்டணியை செம்மறி ஆடுகளுடன் ஒப்பிட்டு விமர்சித்த அண்ணாமலை, தங்கச் சுரங்கத்தையே கொட்டினாலும் தாமரைக்குதான் மக்கள் வாக்களிப்பார்கள் என்று பேச்சு.

அண்ணாமலை
அண்ணாமலை
 • எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீத தொகையை தயாநிதி மாறன் செலவே செய்யவில்லை என இபிஎஸ் குற்றச்சாட்டினை முன்வைத்தநிலையில், சரியாக விசாரிக்காமல் எடப்பாடி பழனிசாமி உளறிக்கொட்டி இருப்பதாக திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பதில்.

 • வள்ளலார் சத்திய ஞான சபையில் சர்வதேச மையம் கட்டுவதற்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், “எதிர்ப்பை மீறி கட்டினால், அதிகாரத்திற்கு வரும்போது இடித்து அகற்றுவேன்” என பரப்புரையில் ஆவேசம்.

 • “ஜிஎஸ்டி குறித்து முழுமையாக படித்தபின் நேரடியாக விவாதிக்க தயாரா?” என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் சவால்.

 • மதுரை அவனியாபுரத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை நடத்தினார். அதில், விஜயபிரபாகரன் வென்றால் விருதுநகர் தொகுதி மக்கள் ஆசியுடன் திருமணம் நடைபெறும் என உருக்கம்.

 • முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி காலமானார். இந்நிலையில், ‘இலக்கிய உலகிற்கு பேரழிப்பு’ என முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்.

 • நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை தள்ளுபடி செய்யக் கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.

 • போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் குரலை பதிவு செய்த என்சிபி. பழைய ரெக்கார்ட்டிங்கிடுடன் ஒப்பிட்டு பார்க்க பட்டியாலா நீதிமன்றம் அனுமதியளித்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 • சாதி, மதங்களை கடந்து கொண்டாடப்படும் மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் ரோஸ்மில்க் வழங்கிய காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

 • மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காவல் நீட்டிக்கப்பட்டநிலையில், கைதுக்கு எதிரான மனு மீது வரும் 24ஆம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவு.

 • ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாரானதா இஸ்ரேல்?. எப்போது வேண்டுமானலும் தாக்குதல் தொடங்கலாம் என டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியீடு.

 • பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் 36 பேர் உயிரிழப்பு. மேலும், மின்னல் தாக்கியதில் 7 குழந்தைகள் உட்பட 21 பேர் இறந்த பரிதாபம்.

 • ஐபிஎல் லீக் போட்டியால் சின்னசாமி மைதானத்தில் பொழிந்த சிக்சர் மழை. இமாலய இலக்கை அடைய கடைசி வரை போராடி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது பெங்களூரு அணி.

 • பல்வேறு சாதனைகளை படைத்த, ஹைதராபாத்- பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நடைப்பெற்றநிலையில், ஒரே ஆட்டத்தில் அதிகபட்ச ரன்கள், பவுண்டரிகள் விளாசி அசத்தல்.

 • 'கோட்' திரைப்பட பாடலுக்கு எதிராக காவல் ஆணையரகத்தில் போதைப்பொருள் கலாசாரத்தை தூண்டும் விதமாக விஜய் செயல்படுவதாக குற்றச்சாட்டினை முன்வைத்து புகார்.

தலைப்புச் செய்திகள்
”போதைப்பொருள், ரத்த வெறியைத் தூண்டுகிறார் நடிகர் விஜய்” - GOAT பட பாடல் குறித்து போலீசில் புகார்!
 • அதிரடி ஆக்ஷன்களுடன் விஷாலின் 'ரத்னம்' படத்தின் டிரெய்லர் வெளியீடப்பட்ட நிலையில், வரும் 26ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிப்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com