இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் - முதலிடம் பிடிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் ஈரான் முதல் புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

 • இஸ்ரேல் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்.இந்நிலையில், எந்த தாக்குதலையும் சமாளிக்க தயார் என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 • துபாயிலிருந்து இந்தியா வந்துகொண்டிருந்த சரக்கு கப்பலை சிறைபிடித்தது ஈரான்.இதில், 17 இந்தியர்கள் உட்பட 25 பேர் சிக்கியுள்ளதாக தகவல்.

 • ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் மீது கல்வீசாப்பட்டநிலையில், நெற்றியில் காயம்பட்டு ரத்தம் கொட்டியதால் பரபரப்பு.

 • ஜெகன்மோகன் மீதான தாக்குதலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.மேலும், விரைவில் நலமடையவேண்டும் என பிரதமர் பதிவுவிட்டுள்ளார்.

 • வாக்குறுதிகள் என்னென்ன?, திட்டங்கள் எவைஎவை? என்று இன்று காலையில் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது பாஜக.

 • சமூகநீதி என்றாலே பாஜகவுக்கு அலர்ஜி என அவிநாசி பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.

 • ஜூன் 4ஆம் தேதிக்கு பின் டிடிவி தினகரன் வசம் அதிமுக வரும் என தேர்தல் பரப்புரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சு.

 • ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு யார் காணாமல் போவர்கள் என மக்கள் முடிவு செய்வார்கள் என்று அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதில்.

 • வானவில் கூட்டணி அலங்காரமாக தெரியும். ஆனால், சீக்கிரம் மறைந்து போய்விடும் என திமுக கூட்டணி குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விமர்சனம்.

 • இந்தியாவை பாஜக, காங்கிரஸ் பிச்சைகார நாடாக மாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டினை முன்வைத்த அவர், வளரும் நாடுகள் பட்டியலில் இந்தியாவின் பெயர்கூட இல்லை என விமர்சனம் செய்துள்ளார்.

 • குன்றத்தூரில் மினி லாரியில் எடுத்து செல்லப்பட்ட ஆயிரத்து 425 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் இருந்து கொண்டுச் செல்லப்பட்டபோது கைப்பற்றி தேர்தல் பறக்கும்படை அதிரடி.

 • திருப்பூர் காங்கேயம் அருகே பாஜக நிர்வாகி வீட்டில் 31 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டநிலையில், அது ஆற்றல் அசோக்குமாருக்கு சொந்தமான பணம் என தகவல் .

 • பழனி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரியுடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததில், பொதுமக்களில் ஒரு பெண்ணை தாக்கினார் நகராட்சி தலைவரின் மகள்.

 • நாமக்கல் அருகே லாரி உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில், கணக்கில் வராத 80 லட்சம் ரூபாயை கைப்பற்றி அதிகாரிகள் நடவடிக்கை.

 • அதிமுக நிர்வாகிகளின் செல்போன்கள் இஸ்ரேல் உளவு மென்பொருள் மூலம் ஒட்டுகேட்கப்படுகிறது என தமிழக காவல்துறை மீது தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் வழக்கறிஞர் புகார்.

 • மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தொடங்கி விட்டது.மேலும், பத்து தளங்களுடன் கட்டப்படும் என எய்ம்ஸ் நிர்வாகம் அறிவிப்பு.

 • ராமநாதபுரத்தில் உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை எனக்கூறி வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் மேற்கொண்டனர்.

 • பெங்களூரூ உணவக குண்டுவெடிப்பு வழக்கில் கைதான இருவரை பத்து நாள் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என தேசிய புலனாய்வு முகமைக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

 • மேகா இன்ஜினியரிங் நிறுவனம் மீது சிபிஐ ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

 • விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த GOAT படக்குழு.இந்நிலையில், முதல் பாடல் இன்று வெளியாகும் என அறிவிப்பு.

 • ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்க்ஸ் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.இந்நிலையில், ஐந்து வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com