இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | மக்களவை தேர்தலுக்கு பொது விடுமுறை முதல் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மக்களவை தேர்தலுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டது முதல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி வரை நேற்றைய முக்கிய செய்திகள் பலவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

  • மக்களவை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் பொதுவிடுமுறை என தலைமை செயலாளர் உத்தரவினை வெளியிட்டுள்ளார்.

  • மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறது காங்கிரஸ் கட்சி. இவ்வறிக்கையானது ஜனநாயகத்தின் ஐந்து தூண்களை மையப்படுத்தி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

  • மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி என்னும் பெயரில், அபராதம் விதித்தே 21ஆயிரம் கோடி ரூபாயை ஏழைகளிடம் பறித்திருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் - பிரதமர் மோடி
முதலமைச்சர் ஸ்டாலின் - பிரதமர் மோடிமுகநூல்
  • I.N.D.I.A. கூட்டணிக்கு யார் பிரதமர் என ஸ்டாலினால் சொல்ல முடியுமா? என நீலகிரி தொகுதியில் பரப்புரையின்போது எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

  • மரியாதை அரசியல் செய்தாலும், கோட்டை தாண்டினால் நாங்களும் தாண்டுவோம் என ஈரோட்டில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சீற்றம்.

  • இந்தத் தேர்தலை விட்டுவிட்டால் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது என மயிலாப்பூரில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பரப்புரை.

  • வரிப்பங்கீட்டில் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிப்பதாக 29 பைசா நாணயம் வரைந்த பதாகையைக் காட்டி பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு.

  • "கட்டற்ற சுதந்திரத்தால் மக்கள் சட்டதிட்டத்தை கடைப்பிடிப்பதில்லை. ஆகவே அளவு கடந்த சுதந்திரம் சரியாக வராது" என சீமான் பரப்புரை.

சீமான்
சீமான் PT WEB
  • மயிலாடுதுறை அருகே சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க முயற்சி. இதனால், ஆரோக்கிய நாதபுரத்தை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள 9 பள்ளிகளுக்கு விடுமுறை.

  • டெல்லியில் நடைப்பெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பு.

  • கர்நாடகத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை இரவு பகலாக இருபது மணி நேரம் போராடி மீட்ட மீட்புக்குழுவினர்.

  • பத்து பேரின் உயிரைப்பறித்த தைவான் நிலநடுக்கத்தில் மேலும் பலரை காணவில்லை. 300க்கும் அதிக நில அதிர்வுகளால் மத்தியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகிறது.

  • விடா முயற்சி படத்தில் கார் சேஸிங் காட்சியில் நடித்த அஜித்குமார் டூப் இல்லாமல் நடித்த மேக்கிங் வீடியோ வெளியீடு.

  • திருப்பத்தூரில் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் வீட்டில் 40 லட்சம் ரூபாயை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கை என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கருத்து தெரிவித்துள்ளார்.

  • ஸ்டெர்லைட் ஆலை சுற்றுப்புற மாசை சீரமைக்கும் திட்டத்தை வகுக்கும் பணியை தனியாருக்கு வழங்கியது ஏன்? என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

  • வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த உத்தரவிடவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சுயேச்சை வேட்பாளர் வழக்கு.

  • ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
அன்று ”இந்த வீரரே வேண்டாம்” என மறுத்த பஞ்சாப் அணி.. இன்று தனியாளாக சம்பவம் செய்த ஷசாங்! யார் இவர்?
  • ஐபிஎல் தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்யுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? ஐதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com