HeadLines|சின்னம் கிடைக்காத வருத்தத்தில் நாதக, விசிக, மதிமுக To கருந்துளையை படம்பிடித்த TELESCOPE!

இன்றைய காலைத் தலைப்புச் செய்தியானது வேட்புமனுக்கள் மீது பரிசீலனை முதல் கருந்துளையை படம்பிடித்த TELESCOPE வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
 • தமிழ்நாடு, புதுச்சேரியில் வேட்புமனுத்தாக்கல் நேற்றுடம் நிறைவடைந்த நிலையில், வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை நடக்கிறது.

 • பிரதமருக்கு எதிராக வாய் திறக்காத எடப்பாடி பழனிசாமி, ஆளுநரின் செயல்பாடுகளையும் கண்டிப்பதில்லை என ஸ்ரீவில்லிபுத்தூர் பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

 • திமுக ஆட்சிக்கு வந்தபின் அத்தியாவசிய பொருட்களின் விலை 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.மேலும், குப்பைக்கு கூட வரி விதிக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

 • விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க மறுப்பு.இந்நிலையில், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக திருமாவளவன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

 • மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க மறுத்ததால் சிலிண்டர் அல்லது தீப்பெட்டி சின்னத்தை வழங்க வலியுறுத்தி வருகின்றனர்.

 • தென்காசியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

 • மதுரை மக்களவைத் தேர்தலில் மாம்பட்டி ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர் போட்டி.இவரின் சொத்து மதிப்பு 921 கோடி ரூபாய் இருப்பதாக வேட்புமனுவில் தகவலளித்துள்ளார்.

 • தேர்தலில் தன்னை பின்னுக்குத் தள்ள நினைப்பதால் கரும்பு விவசாயி சின்னத்தை வழங்கவில்லை என சீமான் குற்றச்சாட்டு. மேலும், சின்னத்தின் மூலம் விழுக்காட்டை குறைக்கலாம் என எண்ணுவதாக புகார் எழுப்பியுள்ளார்.

 • வேட்புமனு தாக்கலின் போது அனுமதியின்றி பேரணியாக சென்ற புகாரில் வேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்த் உட்பட 100 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யதுள்ளனர்.

 • சாத்தான்குளம் தந்தை மகன் கொலைக்கு காவல் ஆய்வாளர் ஸ்ரீதரே காரணம் என மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி அதிகாரி அனில்குமார் சாட்சியம்.

 • தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து அறிக்கை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 • கேரள மாநிலம் வயநாட்டில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.இதில், சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழப்பு.

 • கர்நாடகாவில் ஒரேநாளில் நீரில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு.ஆற்றில் குளிக்கச் சென்றபோது நிகழ்ந்த பரிதாபம்.

 • பணபலம் இல்லாததால் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

 • விரைவில் திகார் சிறைக்கு செல்கிறாரா கெஜ்ரிவால்?அமலாக்கத்துறை விசாரணை முடிந்து சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்படுகிறார்...

 • மக்களவை தேர்தலுக்கான 7ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக .இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியில் நவ்நீத் ராணா போட்டி.

 • அருணாச்சல சட்டப்பேரவையில் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் 6 பேர் போட்டியின்றி தேர்வு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

 • பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத்தை அவதூறாக விமர்சித்த புகாரில் காங்கிரஸ் நிர்வாகி சுப்ரியா ஷ்ரினேட்டுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 • பால்வெளி அண்டத்தின் மையப்பகுதியில் இருக்கும் கருந்துளையை படம்பிடித்த EVENT HORIZONE TELESCOPE.இதன்மூலம், வலுவான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட காந்தபுலங்கள் இடம்பெற்றுள்ள புகைப்படம் வெளியீடப்பட்டுள்ளது.

 • தாய்லாந்தில் நாடாளுமன்றத்தில் மசோதாவில், தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது.

 • ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்கு இரண்டாவது தோல்வி. முதல் வெற்றியை பதிவு செய்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.

 • ஐபிஎல் போட்டியில் ரன் மழை பொழிந்ததால் இரு அணிகளும் சேர்த்து 523 ரன்கள் குவிப்பு.இதில், 20 ஓவர்களில் 277 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

 • ஐபிஎல் தொடரில் டெல்லி - ராஜஸ்தான் அணிகள் ஜெய்ப்பூர் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு பலப்பரீட்சை.

 • தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் ஏப்ரல் 5ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com