தலைப்புச் செய்திகள் | மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முதல் செந்தில் பாலாஜி வழக்கு வரை

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது 56 மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முதல் இன்று நடைபெறவுள்ள செந்தில் பாலாஜியின் வழக்கு வரை பலவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்pt
  • தேர்தல் பத்திரங்கள் செல்லுபடியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு இன்று தீர்ப்பு வழங்குகிறது ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு.

  • 56 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலுக்கு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா போட்டியிடுகிறார். முதன்முறை மாநிலங்களவை எம்பியாக ராஜஸ்தானில் இருந்து தேர்வாகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி.

  • ஊழலற்ற அரசுதான் உலகின் இன்றைய தேவை என்று துபாய் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பேச்சு.

  • சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இன்று விவாதம் நடக்கிறது. பதிலுரை அளிக்கிறார் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின்.

  • நாடாளுமன்றம் மற்றும் 30 சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது மாயாஜாலமா? என்று ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானத்தில் கேள்வி.

சட்டப்பேர்வை கூட்டத்தொடர் 2024
சட்டப்பேர்வை கூட்டத்தொடர் 2024
  • மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் கொண்டுவந்த தனித்தீர்மானமும் நிறைவேறியது. மக்கள் தொகையை குறைக்காத மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தனித்தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. உயர்மட்ட குழுவிடம் அதிமுக அளித்த 10 கோரிக்கைகளை ஏற்றால் ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரிப்போம் என தளவாய் சுந்தரம் பேச்சு.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
ஒரே நாடு ஒரே தேர்தல் | “இதைவிட காமெடி கொள்கை இருக்க முடியுமா?” சட்டமன்றத்தில் முதலமைச்சர் விமர்சனம்!
  • சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் மீண்டும் சந்திப்பு. பாஜகவுடன் தாம் கூட்டணி அமைப்பதை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

  • ஜாமீன் கோரிய மனு மீது முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு வாதங்கள் நிறைவான நிலையில் அமலாக்கத்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் இன்றும் வாதம் நடக்க இருக்கிறது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிfile image
  • நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் பாஜக வெற்றி பெற்றால் NIA காவல் நிலையம் அமைக்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி அளித்துள்ளார்.

  • வேலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து உணவகத்துக்குள் நுழைந்த காரால் பெண் தூக்கிவீசப்பட்டுள்ளார். இது குறித்த பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

  • எடப்பாடி அருகே அரசு பள்ளி மாணவர்களிடையே கோஷ்டி மோதலால் மாணவர்களை அழைத்து அப்பகுதி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • போராடும் விவசாயிகள் கூட்டமைப்பு உடனான பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டும் மத்திய அரசு... சண்டிகரில் இன்று மாலை நடைபெறும் 3வது கட்ட பேச்சுவார்த்தையில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்பு.

  • டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்துக்கு வந்த விவசாயிகள் மீது ஷாம்பு எல்லையில் ட்ரோன் மூலம் கண்ணீர் புகை வீச்சை பட்டம் விட்டு தடுத்த பஞ்சாப் விவசாயிகள்.

  • மகாராஷ்டிரா, குஜராத் மாநில மக்களின் மனதில் இடம்பிடித்த பிரதமர் நரேந்திர மோடி

  • புதிய தலைமுறை மற்றும் தி ஃபெடரல் இணையதளம் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

  • உலகின் மூன்றாவது பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியாவின் அதிபராகிறார் பிரபாவோ. 58 சதவீத வாக்குகளுக்கு மேல் பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

  • புற்றுநோய்க்கான தடுப்பூசியை ரஷ்யா விரைவில் கண்டறியும். இதற்கான இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது - ரஷ்ய அதிபர் புதின்.

  • காதலர் தினத்தில் கலர்ஃபுல்லாக காட்சியளித்த நியூ யார்க் டைம்ஸ் சதுக்கம். உற்சாகத்துடன் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடிகள்.

ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் புதின்
  • துருக்கி நாட்டில் தங்க சுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு. வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது சரிந்த விழுந்த மண்ணால் பரபரப்பு.

  • இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் வெற்றி தொடருமா? ராஜ்கோட் மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

  • டெஸ்ட் போட்டிகளில் புதிய சாதனை படைத்து ஒரு விக்கெட் வீழ்த்தி 500 விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் இணைவார் அஸ்வின் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

  • டி20 உலகக்கோப்பைக்கு தொடருக்கு ரோகித் சர்மாவே கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தகவல் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com