தலைப்புச் செய்திகள் | திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் முதல் இளையோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் வரை

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது திமுக எம்.பி.க்களின் ஆர்ப்பாட்டம் முதல் இளையோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் வரை பல முக்கிய விஷயங்களை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

  • மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்றம் முன் திமுக எம்.பி.க்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளனர். வெள்ள நிவாரண நிதியை விரைந்து வழங்க வலியுறுத்தி இது நடைபெறுகிறது.

  • மாநில வரிப்பங்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு. கர்நாடகாவை தொடர்ந்து டெல்லியில் கேரள அரசும் இன்று போராட்டம்.

  • வரும் 10ஆம் தேதி வரை மக்களவையில் விவாதம் நடைபெறும். முக்கிய காரணிகளுக்காக ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக விளக்கம்.

  • பாஜக கூட்டணியில் இணைகிறாரா சந்திரபாபு நாயுடு?..டெல்லியில் ஜெ.பி.நட்டா, அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை.

  • அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே. எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகள். உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணை.

  • ஸ்பெயின் பயண வெற்றியை போல I.N.D.I.A கூட்டணியின் வெற்றியும் அமையும். பயணம் வென்றது, களம் வெல்லட்டும் என்ற தலைப்பில் தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
’ஸ்பெயின் பயணம் வெற்றி பயணம்’ டூ ’விஜய் அரசியல் கட்சிக்கு வரவேற்பு’ - முதல்வர் பேட்டி முழுவிபரம்!
  • கூட்டணிக்கதவுகள் திறந்தே இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு.

  • எடப்பாடி பழனிசாமிக்கு கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டது என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விமர்சனம்.

  • “ஓரிரு வாரங்களில் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுபெறும். தமிழகத்தில் இருந்து பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு செல்வது உறுதி” என அண்ணாமலை நம்பிக்கை.

  • 14 மக்களவை தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் தரும் அணியோடு கூட்டணி - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு.

  • கேரளாவிலும் அரசியலில் கால் பதிக்க முயற்சிக்கிறாரா விஜய்? கேரள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை

  • நியாயவிலைக்கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் நீக்கப்படாது.குடும்ப அட்டையும் ரத்து செய்யப்படாது என தமிழக அரசு விளக்கம்.

  • போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. வரும் 21ஆம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்த முடிவு.

  • உதகை காந்திநகரில் கழிவறை கட்டுமான சுவர் இடிந்த விபத்தில் ஆறு பெண்கள் உயிரிழப்பு. கட்டட உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது

உதகையில் தடுப்புச் சுவர் இடிந்துவிழுந்து விபத்து
உதகையில் தடுப்புச் சுவர் இடிந்துவிழுந்து விபத்து
  • மதுரை மேலூர் அருகே வீடு புகுந்து குடும்பத்தினரை கொலை செய்ய முயற்சி. குற்றவாளிகளை கைது செய்து உரிய விசாரணை மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு.

  • இமாச்சலில் விபத்துக்குப்பின் காணாமல்போன வெற்றி துரைசாமியை 40 கிலோமீட்டர் தொலைவு வரை தேடல். இன்றும் பணிகள் தொடரும் என அறிவிப்பு

  • காங்கிரஸ் கட்சி காலாவதியாகிவிட்டதாக மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு. காங்கிரஸ் எப்போதும் இடஒதுக்கீட்டை எதிர்த்திருப்பதாகவும் கருத்து.

  • காங்கிரஸ் கூட்டணி குறித்து பொய்யான தகவல்களை பிரதமர் மோடி கூறியதாக குற்றச்சாட்டு. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் பற்றி பேசாதது ஏன் என கார்கே கேள்வி.

  • பாஜக கூட்டணியில் மீண்டும் இணைந்த பிறகு முதன்முறையாக பிரதமர் மோடியை சந்தித்தார் நிதிஷ்குமார்.

  • மதுபான கொள்முதல் முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு இறுகும் பிடி.

  • இந்தியாவிலேயே முதலாவதாக உத்தராகண்ட் சட்டப்பேரவையில் நிறைவேறியது பொது சிவில் சட்ட மசோதா

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
பொது சிவில் சட்ட மசோதா: உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!
  • பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் அலுவலகங்களை குறிவைத்து அடுத்தடுத்து குண்டுவெடிப்பு.

  • புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மன்னர் சார்லசுக்கு தொடர் சிகிச்சை. பங்கிம்ஹாம் அரண்மனையில் இருந்து வெளியேறி சான்ட்ரிங்காம் இல்லத்தில் ஓய்வு.

  • ஸ்பெயினில் வலுக்கும் விவசாயிகள் போராட்டம். துறைமுக வழியை மறித்து போராட்டம் நடத்தியவர்கள் குண்டுகட்டாக கைது.

  • டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் பும்ரா முதலிடம் பிடித்து அசத்தல். மூன்றாமிடம் பிடித்தார் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்.

  • இளையோருக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
உலக டெஸ்ட் தரவரிசையில் பும்ரா முதலிடம்! 147 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதல் வேகப்பந்துவீச்சாளர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com