காலை தலைப்புச்செய்திகள்|முதல்வரின் ஸ்பெயின் பயணம் நிறைவு - சைதை துரைசாமியின் மகனை தேடும் பணி தீவிரம்

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது முதல்வரின் ஸ்பெயின் பயணம் முதல் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் 2024 வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்புதிய தலைமுறை

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

  • ஸ்பெயின் பயணம் முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். மறக்க முடியாத நினைவுகளை ஸ்பெயின் தமிழ்ச்சமூகத்தினர் தந்ததாக எக்ஸ் தளத்தில் பதிவு.

  • நலத்திட்டங்களின் பயன்கள் முழுமையாக மக்களைச் சென்றடைவதே உண்மையான மதச்சார்பின்மை. கோவாவில் புதிய வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைத்து பிரதமர் உரை.

  • அதிமுக கூட்டணிக்கு பாஜக கதவுகள் திறந்தே இருப்பதாக மத்திய அமைச்சர் அமித் ஷா பேட்டி. பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தமிழகத்திற்கென தனித்த விசயங்கள் இடம் பெறும் எனவும் கருத்து.

  • பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவை சந்திக்க உள்ளதாகத் தகவல்..

  • மக்களவையில் திமுக - பாஜக எம்பிக்கள் இடையே வாக்குவாதம்.பட்டியலின சமூக அமைச்சரை டி.ஆர். பாலு அவமதித்ததாக பாஜக குற்றச்சாட்டு. திமுக வெளிநடப்பு.

  • பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் தன்னை டிஆர்பாலு அவமதித்து பேசினார்.மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு.

  • துறை சாராத அமைச்சர் இடையூறு செய்ய வேண்டாம் எனக் கூறியதை பாஜகவினர் தவறாக சித்தரிக்கிறார்கள். திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவர் டிஆர் பாலு விளக்கம்.

  • மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதாகக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு முறையீடு. நடவடிக்கையை வரவேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வருக்கு கடிதம்.

  • நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் அடிப்படையிலேயே மாநிலங்களுக்கு நிதி அளிக்கப்படுகிறது. வரிப்பங்கீட்டில் எந்த பாரபட்சமும் இல்லை என புதிய தலைமுறைக்கு மத்திய நிதித்துறை செயலாளர் சோமநாதன் பேட்டி.

  • இமாச்சலப் பிரதேசத்தில் காணாமல் போன சைதை துரைசாமியின் மகனை தேடும் பணி தொடர்வதாக அம்மாநில டிஜிபி அறிக்கை. ஆற்றின் கரையோரம் கண்டெடுக்கப்பட்ட மனித மூளையை டிஎன்ஏ பரிசோதனை அனுப்பவும் முடிவு.

  • கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட பிரதிநிதிகளுடன் திமுக தேர்தல் அறிக்கைக்குழு கருத்துக்கேட்பு.

  • மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும் என கனிமொழி பேச்சு மின்சார வாரியத்தை மேலும் பிரித்து தனியார்மயமாக்க முயற்சிப்பதா?தமிழ்நாடு அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

  • தாம்பரம் அருகே வழக்கறிஞர் வீட்டில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு.காவல்துறையினர் தீவிர விசாரணை. திருச்சியில் குப்பையாக வீசப்பட்ட ஆதார் கார்டுகள்.பொதுமக்கள் அதிர்ச்சி- நிகழ்விடத்தில் காவலர்கள் ஆய்வு.

  • தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் கடிகாரம் சின்னத்தை அஜித்பவாருக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.சரத்பவார் தனது கட்சிக்கு வேறு பெயரை சூட்டிக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

  • கட்சி மற்றும் சின்னம் அஜித் பவாருக்கு வழங்கப்பட்ட விவகாரம்.கண்ணுக்குப் புலப்படாத சக்தியின் வெற்றி என தேசிய வாத காங்கிரஸ் எம். பி. சுப்ரியா சுலே விமர்சனம்.

  • அரசியலில் கொள்கை பிடிப்புக் கொண்டவர்களின் எண்ணிக்கை அருகி வருகிறது.மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கவலை

  • ஜார்க்கண்டில் பாத யாத்திரையின்போது ராகுல் காந்தி நாய் பிஸ்கட்டை வழங்கியதாக புகார்.

  • ஆம் ஆத்மி கட்சியினருக்கு இடையூறு தரவே அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தப்படுகின்றன..டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்.

  • குவைத்தில் இருந்து வந்த படகால் எழுந்த ஐயம்.மும்பை காவல்துறையினர் தீவிர விசாரணை.

  • உத்தராகண்ட் சட்டப்பேரவையில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்.‘Live in relationship’-ல் உள்ளவர்கள் பதிவு செய்யாவிட்டால் 3 மாத சிறை.

  • காசாவில் புதிய சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு.முன்வைக்கப்பட்ட வரைவுத் திட்டத்திற்கு ஹமாஸ் நேர்மறையான பதிலை அளித்திருப்பதாகத் தகவல்.

  • ஹெலிகாப்டர் விபத்தில் சிலியின் முன்னாள் அதிபர் உயிரிழப்பு.ஏரியில் இருந்து உடலை மீட்ட ராணுவத்தினர்.

  • தேர்தல் முறைகேடு வழக்கு விசாரணையில் இருந்து ட்ரம்ப் விலக்குக் கோர முடியாது.வாஷிங்டன் நீதிமன்றம் திட்ட வட்டம்.

  • ரஷ்யா தாக்க முற்பட்டால் நாங்கள் போருக்குத் தயாராக இருக்கிறோம்.போலந்து துணைப் பிரதமர் விளாடிஸ்லேவ் கோஸினியாக், பாதுகாப்புத்துறை அமைச்சர் கூட்டாக அறிவிப்பு.

  • இளையோர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

  • தமிழ்நாடு ப்ரீமியர் லீக் 2024 சீசனுக்கான ஏலம்.சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com