இன்றைய காலை தலைப்புச்செய்திகள்| பிப்.25ல் தமிழகம் வருகிறார் பிரதமர் - முதல்வரானார் சம்பய் சோரன்

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு முதல் போலி ID-க்களை உருவாக்கிய நடிகர் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்புதிய தலைமுறை

இன்றைய காலை தலைப்பு செய்திகள்:

  • மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் 2 டிஎம்சி தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு.

  • காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரத்தை ஆலோசிக்க அனுமதித்தது ஏன்?.

  • விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும்.உணவுப் பொருள் வழங்கல், பொதுவிநியோக திட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்.

  • தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய்.

  • தமிழக வெற்றி கழகம் கட்சியை பதிவு செய்ய அனைத்து ஆவணங்களையும் கொடுத்துள்ளோம்.

  • அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டிய கமல்ஹாசன்.

  • சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடப்போவதால், திமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என திமுக எம்பி கனிமொழி கருத்து.

  • மீண்டும் வரும் 25ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

  • மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நியமனம்.

  • தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்புடைய 6 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை.

  • கோடநாடு வழக்கில் குற்றவாளிகளை கண்டறிய உதவுமா ஆடியோ கேசட்கள்?.

  • தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சம்மன்.

  • சாத்தான்குளத்தில் பீர் அருந்திய நபருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.

  • சென்னையில் மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது. சாக்லேட் தருவதாகக்கூறி அழைத்துச் சென்று கொடூர முகத்தை காட்டியது அம்பலம்.

  • தருமபுரி அருகே சட்டவிரோதமாக கருவின் பாலினம் குறித்து தெரிவித்த 2 பேர் கைது.

  • தூத்துக்குடி புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.

  • மயக்கஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது, கேரளாவின் மாணந்தவாடி நகரில் சுற்றி வந்த காட்டுயானை.

  • 12 ஆண்டுகளாக சொந்த வீட்டிலேயே சிறை தண்டனையை அனுபவித்து வந்த பெண்.

  • ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக சம்பய் சோரன் பதவியேற்பு.

  • முதன்முறையாக இந்தியாவின் யு.பி.ஐ பணபரிவர்த்தனையை ஏற்கும் ஐரோப்பிய நாடாக மாறியது பிரான்ஸ்.

  • சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்த மெக்சிகோ அகதிகள் முகாம்களில் தங்கவைப்பு.

  • ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா.

  • இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.

  • வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிகபட்ச சம்பளம் வாங்க இருக்கிறார் ஷமர் ஜோசப்.

  • தன் பெயரில் போலி ID-க்களை உருவாக்கி பணம் கேட்பதாக எழுத்தாளரும், நடிகருமான வேலராமமூர்த்தி வீடியோ பதிவு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com