தலைப்புச் செய்திகள் | பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் ஒரே நாளில் 6 தங்கப்பதக்கங்களை வென்ற தமிழ்நாடு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது குடியரசுத் தலைவரின் உரையுடன் இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் 6 தங்கப் பதக்கங்களை வென்ற தமிழ்நாடு வீரர்கள் வரை பலவற்றை விவரிக்கிறது.
இன்றைய  காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்புதிய தலைமுறை

இன்றைய  காலை தலைப்புச் செய்திகள்

  • குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவக்கம்.

  • மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் 14 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை வாபஸ்.

  • தமிழகத்தில் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது, உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம். தாலுகாவாரியாக மக்களின் குறைகளை மாவட்ட ஆட்சியரே நேரடியாக கேட்டறிய ஏற்பாடு.

  • நெல்லையில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அல்வா கொண்டுவந்த திமுக கவுன்சிலர்கள். மேயர் மீது நம்பிக்கையில்லாததால் தனியாக குழு அமைத்துள்ளதாகவும் அறிவிப்பு.

  • நெல்லையைப் போன்று கடலூரிலும் திமுக மேயருக்கு சொந்தக்கட்சி கவுன்சிலர்களே எதிர்ப்பு.வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றவில்லை என 10 கவுன்சிலர்கள் இன்று உண்ணாவிரதம்.

  • தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வருக - ஸ்பெயின் முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு.

  • தமிழக அரசை படையப்பா திரைப்பட பாணியில் விமர்சித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக குற்றச்சாட்டு.

  • சென்னை கோயம்பேட்டில் பசுமைப் பூங்காவைத் தவிர வேறு திட்டத்தை கொண்டுவந்தால் போராட்டம் நடத்தப்படும்.

  • சென்னையில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் திமுக மட்டும்தான் போட்டியிட வேண்டுமா? - கட்சியினர் கேட்பதாக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி.

  • தேனி, மதுரை ஆகிய தொகுதிகளை இந்தமுறை கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கக் கூடாது. திமுக ஒருங்கிணைப்புக்குழுவிடம் மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கை.

  • எம்எல்ஏக்களுடன் நள்ளிரவுவரை ஆலோசனை நடத்திய ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன்... காணவில்லை என அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில் முக்கிய கூட்டம்.

    முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஹேமந்த் சோரன் இன்று ஆஜராக வாய்ப்பு.. கைது செய்யப்பட்டால் மனைவி கல்பனாவை முதலமைச்சராக்க திட்டம்.

  • சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜகவின் மனோஜ் சோன்கர் 4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.தேர்தல் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் குற்றச்சாட்டு.

  • சண்டிகர் மேயர் தேர்தலின்போது வாக்குச்சீட்டுகளில் முறைகேடு செய்தாரா தேர்தல் அதிகாரி? சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவால் சர்ச்சை.

  • அரசு மருத்துவக்கல்லூரிகளில் நோயாளிகளிடம் மருந்துகளை வெளியே வாங்க நிர்ப்பந்தித்தால் கடும் நடவடிக்கை. சிதம்பரத்தில் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை.

  • தமிழக அரசு சின்னம் மற்றும் சைரன் விளக்கு பொருத்திய காரில் வலம்வந்த போலி அதிகாரி உட்பட இருவர் கைது. வேலைவாங்கித் தருவதாக பண மோசடி செய்ததும் அம்பலம்.

இன்றைய  காலை தலைப்புச் செய்திகள்
நெருங்கும் தேர்தல்.. எதிர்பார்ப்பில் பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட்: கவனம் ஈர்க்கும் 6 துறைகள்!
  • நடப்பாண்டு, பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடையும் நாடாக இந்தியா திகழும் என சர்வதேச நிதியம் கணிப்பு. செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரக்கூடும் எனவும் கவலை.

  • மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை. இரு குழுக்களிடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 2பேர் உயிரிழப்பு.

  • ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் குலு அருகே கடும் பனிப்பொழிவில் சிக்கிக்கொண்ட வாகனங்கள். நள்ளிரவில் செய்வதறியாது தவித்த 300 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு.

  • பெரு நாட்டை புரட்டிப்போட்ட கனமழையால் மக்களின் இயல்புவாழ்க்கை முடக்கம்.. நிலச்சரிவால் மண்ணில் புதைத்த கட்டடங்கள்.

  • கேலோ இந்தியா விளையாட்டுகளில் ஒரே நாளில் 6 தங்கப் பதக்கங்களை வென்றது தமிழ்நாடு. பளுதூக்குதல், பேட்மின்டன், டென்னிஸ், நீச்சல் ஆகிய போட்டிகளில் சாதனை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com