தலைப்புச் செய்திகள் |பேருந்து இயக்கத்தில் குழப்பம் முதல் தைப்பூசம் கொண்டாட்டம் வரை

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்புதிய தலைமுறை

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|

  • ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவது கோயம்பேட்டிலா? அல்லது கிளாம்பாக்கத்திலா? என்பதில் நீடிக்கும் குழப்பம்.

  • தருமபுரியில் நெல் ஏற்றி வந்த லாரி, முன்னே சென்ற லாரிகள் மீது மோதி தீப்பிடித்ததில் 4 பேர் உயிரிழப்பு. விபத்து காரணமாக மலைப்பாதையில் 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஸ்தம்பித்து நின்ற வாகனங்கள்.

  • மேகதாதுவில் நடப்பு காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே அணையை கட்டுவோம். கர்நாடக துணை முதலமைச்சர் D.k. சிவக்குமார் திட்டவட்டம்.

  • சார்பதிவாளர் அலுவலகங்களில் நேற்று ஒரே நாளில் 26 ஆயிரம் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு 217 கோடி ரூபாய் வருவாய். தமிழக பதிவுத்துறை வரலாற்றில் புதிய சாதனை.

  • தமிழகமெங்கும் முருகன் கோயில்களில் தைப்பூசம் இன்று கோலாகலம். பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட கோயில்களில் குவிந்த பக்தர்கள்.

  • இடைக்கால பட்ஜெட் பணியை ஒட்டி டெல்லியில் அல்வா சமைக்கும் நிகழ்ச்சி. பாரம்பரிய நடைமுறையை பின்பற்றி நிதியமைச்சக அதிகாரிகளுக்கு அல்வா வழங்கினார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

  • உக்ரைன் போர்க்கைதிகளுடன் சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கி 74 பேர் உயிரிழப்பு. உக்ரைன் தாக்கியதால் விபத்து நேர்ந்ததாக ரஷ்யா குற்றச்சாட்டு.

  • நிலத்தடி நீர் மட்டம் உலகெங்கும் வேகமாக குறைந்து வருவதாக ஆய்வில் அதிர்ச்சித்தகவல். பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் குடிநீர், விவசாய நீர் தட்டுப்பாடு ஏற்படும் என ஆய்வுக்கட்டுரையில் எச்சரிக்கை.

  • இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே முதல் கிரிக்கெட் டெஸ்ட் ஹைதராபாதில் இன்று தொடக்கம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com