தலைப்புச் செய்திகள் | கர்பூரி தாக்கூருக்கு பாரத் ரத்னா முதல் ஆஸ்கருக்கான இறுதி பரிந்துரை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது கர்பூரி தாக்கூருக்கு பாரத் ரத்னா விருது முதல் ஆஸ்கர் விருதுகான இறுதி பரிந்துரைப் பட்டியல் வரை நேற்று மற்றும் இன்றைய முக்கியச் செய்திகளைவிவரிக்கிறது.
தலைப்புச் செய்திகள்
தலைப்புச் செய்திகள் கோப்புப்படம்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்:

  • மறைந்த பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு பாரத் ரத்னா விருது அறிவிப்பு. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட மக்களின் உயர்வுக்காக நலத்திட்டங்களை முன்னெடுத்தவர் இவர்.

  • அயோத்தியில் ராமர் கோயிலை காண லட்சக்கணக்கில் குவிந்த மக்கள். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடிய காவல்துறையினர்.

  • கட்டி முடிக்கப்படாத கோயிலை திறந்து பாஜக தலைமை மக்களை திசை திருப்ப முயல்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

  • “அயோத்தி ராமர் கோயில் விழா ஆன்மிக நிகழ்வுதான்” - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி.

  • மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

  • தைப்பூசம், குடியரசு தின தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம். வரும் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை இயக்கப்படும் என அறிவிப்பு.

  • “கட்டுமான பணிகள் முடிந்துவிட்டால் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்துதான் இயக்கப்படவேண்டும்” என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மீண்டும் திட்டவட்டம்.

  • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கவேண்டும் - பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

  • கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டிற்கு 7ஆவது தங்கம் கிடைத்துள்ளது. ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவில் வாகை சூடினார் பூஜா ஆர்த்தி.

  • ஆஸ்கர் விருதுகான இறுதி பரிந்துரைப் பட்டியல் வெளியானது. சிறந்த ஆவணப்படப் பிரிவில் இந்தியாவின் டு கில் எ டைகர் ஆவணப்படம் போட்டி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com