இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்புதிய தலைமுறை

காலை தலைப்புச் செய்திகள் | சோலார் திட்டம் முதல் 13 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்த தமிழ்நாடு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது சூரிய மின்சக்தி வசதி திட்டம் முதல் 13 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்த தமிழ்நாடு வரை நேற்றைய, இன்றைய நிகழ்வுகள் பலவற்றை விவரிக்கிறது.
Published on

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்:

  • நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி வசதி ஏற்படுத்த புதிய திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.

  • அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை கொண்டாடும் மக்கள். நாடு முழுவதும் வீடுகள் மற்றும் கோயில்களில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு வண்ண மலர்கள் அலங்காரத்துடன் ஜொலித்த அயோத்தி ராமர் கோயில்.

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. சட்டப்பேரவை கூட்டத் தொடர் மற்றும் ஆளுநர் உரைக்கான அம்சங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு.

  • மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை. வரும் 24ம் தேதி முதல் திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு.

  • வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டியாக பாஜகவினர் இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்.

  • விசாரணை குற்றவாளிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் இடைநீக்கம் ரத்து. வழக்கின் தீர்ப்புக்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல்.

  • கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு பணிகளை ஒருங்கிணைக்க அரசு நடவடிக்கை. சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும உறுப்பினர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைப்பு

  • சீனாவின் தெற்கு ஜின்ஜியாங் பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம். டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு.

  • கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் அசத்தும் தமிழகம். 13 பதக்கங்களை வென்று முதலிடம்.

இவை குறித்த விரிவான தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com