இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|கனமழை அறிவிப்பு To மரணத்திற்கு முன் குடியரசுத் தலைவருக்கு கடிதம்!
காவிரி படுகை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு. சென்னையிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை எதிரொலியால், சென்னையில் அம்பத்தூர், கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை.
திருவாரூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் மிதமான மழை. புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவலாக மழை.
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.
கேரள மாநிலம் வைக்கத்தில் கோயில் நுழைவு போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம், நூலகத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன், தொழிலதிபர் அதானியை சந்தித்துள்ளார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும்போது மலை மீது ஏற
பக்தர்களுக்கு அனுமதியில்லை என நிலச்சரிவு ஏற்பட்டதை கவனத்தில் கொண்டு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.
மகா தீபத்திருவிழாவையொட்டி விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 3 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கம்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருவண்ணாமலை வழியாக கார்கள், வேன்கள், லாரிகள் செல்ல 3 நாட்களுக்கு தடை.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 3ஆம் கட்ட அகழாய்வு பணி. நீல நிற கண்ணாடி மணி, சுடு மண்ணால் ஆன பதக்கம் கண்டெடுப்பு.
பி.எஃப். கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் தகவல்.
நாகூரில் கந்தூரி விழாவை ஒட்டி விமரிசையாக நடைபெற்ற சந்தன கூடு ஊர்வலம் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்துள்ள நிலையில் நாகூரில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விரைந்து விடுவிக்க அந்நாட்டு அரசிடம் இந்தியா கோரிக்கை இலங்கை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரிடம் நேரில் கோரிக்கை விடுத்த இந்திய தூதர் சந்தோஷ் ஜா.
மொழி பேரினவாதத்திற்கும் பாகுபாட்டிற்கும் வழிவகுத்துவிட்டது மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பு என பாரதியார் பிறந்த நாள் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.
தற்கொலை செய்துகொள்ளும் முன் நீதித்துறையை சாடி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய கர்நாடக ஐடி ஊழியர். உயிர்வாழும் யாராலும் நீதிமன்றத்திற்கு எதிராக பேச முடியாத நிலை நாட்டில் உள்ளதாக வேதனை.
காஷ்மீரில் ஜம்மு, ஸ்ரீநகர் இரு நகரங்களையும் தலா 6 மாதங்கள் தலைநகராக வைத்திருக்கும் நடைமுறை மீண்டும் அமலுக்கு கொண்டு வரப்படும் என முதலமைச்சர் உமர் அப்துல்லா அறிவிப்பு. கடந்த ஆளுநர் ஆட்சிக்காலத்தில் கைவிடப்பட்ட நடைமுறையை மீண்டும் கொண்டு வர முடிவு.
வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடங்கியதால் பயனாளிகள் அவதி. புகாரை தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறை செய்ய செய்யும் பணியில் ஈடுபட்டது மெட்டா நிறுவனம்.
உலக செஸ் சாம்பியன் ஷிப் தொடரில் குகேஷ் - லிரேன் விளையாடிய 13ஆவது சுற்று ஆட்டம் டிரா. சமநிலை நீடிக்கும் நிலையில் சாம்பியனை முடிவு செய்யும் கடைசி சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது.