Headlines
HeadlinesFacebook

Headlines|பள்ளிகளுக்கு விடுமுறை To AI விஜயகாந்த் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பள்ளிகளுக்கு விடுமுறை முதல் ட்ரம்பால் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு வந்த சிக்கல் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழை பாதிப்பு காரணமாக இன்று விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

  • திருச்சி, தேனி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.

  • விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

  • நெல்லையில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால், வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் கடும் அவதி.

  • தாமிரபரணி ஆற்றில் பேரிரைச்சலுடன் பெருக்கெடுக்கும் வெள்ளம்.

  • தென்காசியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் செங்கோட்டை - வல்லம் இடையே போக்குவரத்து துண்டிப்பு. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதி.

  • அருப்புக்கோட்டையில் கனமழையால் குடியிருப்புப் பகுதியில் ஆறுபோல் பாய்ந்தோடிய வெள்ளத்தில், காவல் துறையின் தடுப்பை, படகாக மாற்றிய சிறுவன்.

  • தஞ்சை பாபநாசத்தில் கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால், திருவையாறில் 30 ஏக்கர் வாழை, 300 ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிப்பு.

  • தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று உருவாகிறது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.

  • திருக்கார்த்திகையை ஒட்டி திருவண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் வழிபாடு.

  • திருவண்ணாமலை மகா தீபத்தை தரிசித்த பிறகு சொந்த ஊர் திரும்பிய பக்தர்கள். தற்காலிக பேருந்து நிலையங்களில் அலைமோதிய கூட்டம்.

  • தமிழகம் முழுவதும் கோயில்களில் மகா தீபம் ஏற்றியும், சொக்கப்பனை கொளுத்தியும் வழிபாடு. இந்தவகையில். லட்ச தீப ஒளியில் ஜொலித்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.

  • ஹைதாராபாத்தில் ரசிகை உயிரிழந்த வழக்கில் கைதான நடிகர் அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன். சிறையில் இருந்து இன்று வெளியே வருவார் என எதிர்பார்ப்பு.

  • அல்லு அர்ஜூனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தெலுங்கு நடிகர்கள். ஒருவர் மீதே அனைத்து குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுவதாக நடிகை ராஷ்மிகா மந்தானா வேதனை.

  • டொனால்ட் ட்ரம்பின் முடிவால் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு சிக்கல். இந்நிலையில், சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கான முதல் கட்ட பட்டியலில் 18 ஆயிரம் இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்.

  • அரசியல் நெருக்கடியால் ஒரே ஆண்டில் 4 பிரதமர்களை கண்ட பிரான்ஸ். இந்நிலையில், புதிய பிரதமராக ஃபிராங்கோயிஸ் பெய்ரூவை நியமித்தார் அதிபர் இமானுவேல் மேக்ரான்.

  • சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் படைத்தலைவன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு. ஏ.ஐ. மூலம் மீண்டும் திரையில் விஜயகாந்தை கண்டதால் ரசிகர்கள் உற்சாகம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com