காலை தலைப்புச் செய்திகள் | பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை முதல் தலைவர்கள் கண்டனம் வரை

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஆம்ஸ்ட்ராங் படுகொலை முதல் ஆனந்த் அம்பானியின் சங்கீத் நிகழ்ச்சி வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங் புதிய தலைமுறை
  • பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

  • ஆன்லைன் உணவு டெலிவரி நபர்கள்போல வந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கும்பல் கொலையாளிகள் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஆற்காடு பாலு உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூடுதல் காவல் ஆணையர் ஆஸ்ரா கர்க் பேட்டியளித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங்புதிய தலைமுறை
  • ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பெரம்பூரில் பாதுகாப்பு நடவடிக்கையாக அதிகளவில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை மாநில அரசு தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்
மாநகராட்சி கவுன்சிலர் டூ பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர்... யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?
  • ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர் குற்றங்கள் நிகழும் அளவிக்கு சட்டம்-ஒழுங்கு இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

  • சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், புதுச்சேரியில் கனமழையால் வேரோடு மரங்கள் சாய்ந்து விழுந்தனர்.

  • தென்காசி அருகே செல்போன் கடை உரிமையாளரை கொடூரமாக தாக்கிய நபர்கள்... கடையை சுத்தம் செய்தபோது குப்பை விழுந்ததை பொருத்துக்கொள்ள முடியாமல் ஆத்திரம் அடைந்ததால் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

  • ஆனந்த் அம்பானி திருமணத்தை முன்னிட்டு நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் மிடுக்காக பங்கேற்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com