தலைப்புச் செய்திகள் | விஷச்சாராய மரணங்கள் 49-ஆக உயர்வு To நீட் தேர்வுக்கு எதிராக காங். போராட்டம் வரை

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, அதிகரித்த விஷசாராய மரணம் முதல் சூப்பர் 8 சுற்றில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
கருணாபுரம், கள்ளக்குறிச்சி - விஷச்சாராயம் அருந்தி 40க்கும் மேற்பட்டோர் மரணம்
கருணாபுரம், கள்ளக்குறிச்சி - விஷச்சாராயம் அருந்தி 40க்கும் மேற்பட்டோர் மரணம்pt web
  • கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் (தற்போதுவரை 49 என சொல்லப்படுகிறது), கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி மருத்துவமனைகளில் 100-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

  • விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம். நெஞ்சை உலுக்கும் கோமுகி ஆற்றங்கரை காட்சிகள் அனைவரையும் உறைய வைத்துள்ளது.

  • விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறி காசோலைகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

  • கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அரசியல் தலைவர்கள் ஆறுதல் தெரிவித்து வரும் சூழலில், மரணத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

கருணாபுரம், கள்ளக்குறிச்சி - விஷச்சாராயம் அருந்தி 40க்கும் மேற்பட்டோர் மரணம்
கருணாபுரம், கள்ளக்குறிச்சி - விஷச்சாராயம் அருந்தி 40க்கும் மேற்பட்டோர் மரணம்pt web
  • விஷச்சாராய பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோருக்கு தவெக தலைவர் விஜய் நேரில் ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில், பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை செய்ய கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

  • கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்தில் சிபிஐ விசாரணை கோருகிறது அதிமுக. இவ்வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

  • விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

கருணாபுரம், கள்ளக்குறிச்சி - விஷச்சாராயம் அருந்தி 40க்கும் மேற்பட்டோர் மரணம்
விக்கிரவாண்டி தேர்தல்| விஜய்யின் தவெக திடீர் அறிக்கை.. நாம் தமிழர் ஆதரவுதான் காரணமா?.. பின்னணி என்ன?
  • நீட் தேர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டத்தில், குளறுபடிகளுக்கு தீர்வு காண வலியுறுத்தப்படுகிறது.

  • மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு பிணை வழங்குவதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடுகிறது அமலாக்கத்துறை.

  • டி20 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா. சூப்பர் 8 சுற்றில் முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com