காலை தலைப்புச் செய்திகள் | புதிய மத்திய அமைச்சர்கள் லிஸ்ட் முதல் துணை அதிபர் சென்ற விமானம் மாயம் வரை

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது புதிய மத்திய அமைச்சர்கள் முதல் துணை அதிபர் சென்ற விமானம் மாயம் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
  • புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அணுசக்தி, விண்வெளி, பணியாளர் நலத்துறைகளை தன்வசம் வைத்துக்கொண்டார் பிரதமர் மோடி.

  • ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்துறை, அமித்ஷாவுக்கு உள்துறை, நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை, ஜெய்சங்கருக்கு வெளியுறவுத்துறை அப்படியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மன்சூக் மாண்டவியா வசமிருந்த சுகாதாரத்துறை ஜெ.பி.நட்டாவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • நரேந்திர சிங் தோமரிடம் இருந்த வேளாண்துறை, சிவராஜ் சிங் சவுகானுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமிக்கு கனரக தொழில்துறையும், தெலுங்கு தேச எம்பி ராம்மோகன் நாயுடுவுக்கு விமான போக்குவரத்துத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • யார் யாருக்கு எந்தெந்த துறை என்ற முழு விவரத்தையும், கீழ்வரும் இணைப்பில் காணலாம்...

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
மத்தியஅமைச்சரவை பட்டியல்|யார் யாருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கீடு? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • ராய் பரேலி பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்று வாக்காளர்களுக்கு நன்றி கூறுகிறார் ராகுல் காந்தி. மேலும், கேரளாவின் வயநாடு தொகுதிக்கு நாளை செல்ல திட்டம்.

ராகுல் காந்தி
ராகுல் காந்திட்விட்டர்
  • நாடாளுமன்ற திமுக குழுத்தலைவராக கனிமொழி, மக்களவை குழு தலைவர் டிஆர் பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • ஜூன் மாதத்திற்காக வரி பகிர்வு நிதியாக ஒரு லட்சத்து 39 ஆயிரம் கோடி ரூபாயை விடுவித்தது மத்திய நிதியமைச்சகம். இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு 5,700 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
மத்திய அமைச்சர் பதவி| அதிருப்தியில் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே
  • கர்நாடகாவை சேர்ந்த சோமன்னாவை மத்திய நீர்வளத்துறை இணையமைச்சராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவிரி நதிநீர் பிரச்னை இருப்பதை சுட்டிக்காட்டி தமிழகத்தில் கண்டனம் வலுத்து வருகிறது.

  • கிழக்கு ஆப்ரிக்க நாடான மலாவியில் துணை அதிபர் சென்ற விமானம் மாயமாகியுள்ளது. இந்நிலையில், ரேடாரில் இருந்து காணாமல் போன விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

  • இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டியில் போராடி வீழ்ந்தது வங்கதேசம். 4 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்க அணி வெற்றியடைந்தது.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
113 ரன்னுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா.. வெற்றியை ருசிக்குமா வங்கதேசம்! இலங்கை வெளியேற வாய்ப்பு?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com