இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|மூன்றாவது முறையாக பதவியேற்கும் மோடி To இந்தியா-பாகிஸ்தான் போட்டி!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மூன்றாவது முறையாக பதவியேற்கும் மோடி முதல் குரூப்-4 தேர்வு இன்று நடைபெறுகிறது வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
  • நாட்டின் பிரதமராக இன்று மூன்றாவது முறையாக பதவியேற்கிறார் நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார்.இதில், இலங்கை, வங்கதேசம், நேபாளம், மாலத்தீவு தலைவர்கள் பங்கேற்க இருப்பதால், டெல்லியில் உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • பிரதமர் பதவியேற்பு விழாவையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகை விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில், வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் விருந்தினர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • தமிழகத்தை சேர்ந்தவருக்கு மத்திய அமைச்சரவையில் இடமா? இது குறித்து, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

  • நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.

  • சரியான நேரத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும், நடப்பு நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக மம்தா பானர்ஜி பேச்சு.

  • பலவீனமான பாஜக அரசை நமது முழக்கம் மூலம் செயல்பட வைப்போம் என புதிதாக தேர்வான திமுக எம்.பி. க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

  • தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில், 6 ஆயிரத்து 244 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 20 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர்.

  • அரியலூரில் பாதி வழியில் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட குரூப் 4 தேர்வர்கள். கூட்டம் நிரம்பி வழிந்ததால் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி, நியூயார்க் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

  • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் போலந்தின் இகா ஸ்வியாடெக். இத்தாலியின் பயோலினியை 6-2, 6-1 என்ற நேர்செட்களில் வீழ்த்தி அசத்தல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com