இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | மீண்டும் பிரதமராகும் மோடி முதல் கனமழை எச்சரிக்கை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மீண்டும் பிரதமராகும் மோடி முதல் கனமழை எச்சரிக்கை வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
  • தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் நாளை மறுநாள் மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • 17வது மக்களவையை கலைக்க ஒப்புதல் வழங்கியதையடுத்து மத்திய அமைச்சர்களுக்கு இரவு விருந்து அளித்தார் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு.

மத்திய அமைச்சர்களுக்கு இரவு விருந்து அளித்தார் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு
மத்திய அமைச்சர்களுக்கு இரவு விருந்து அளித்தார் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு
  • பாஜகவின் மக்கள் விரோத போக்கை தொடர்ந்து எதிர்ப்போம் என I.N.D.I.A. கூட்டணிக் கட்சித்தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு மல்லிகார்ஜூன கார்கே சூளுரை.

  • “I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை. அமைதியாக அரசியலை கவனிப்போம்” என விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
”சந்தேகமே இல்லாமல் 300+ இடங்களில் பாஜக வெல்லும்”- ஆருடம் சொன்ன பிரசாந்த் கிஷோரை தேடும் நெட்டிசன்கள்!
  • ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கும் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் இருவரும் பரஸ்பரமாக சந்தித்து கொண்டனர்.

  • புதுக்கோட்டை, தஞ்சை, கிருஷ்ணகிரி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ததால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுக்க, வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

  • தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும், 11ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

  • திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழாவில், 200 கிடாக்களுடன் சுடச்சுட தயாரான கறிவிருந்தை பக்தர்கள் பகிர்ந்து உண்டனர்.

  • சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வெற்றிகரமாக புறப்பட்டார் இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது அட்லஸ்வி ராக்கெட் மூலம் பயணம் மேற்கொண்டார்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
வடமாநிலங்களில் அதிர்ச்சி தோல்வி; BJP-ன் வாக்குகளை சரித்ததா யூட்யூபர் துருவ் ரத்தேவின் வீடியோக்கள்?
  • டி20 உலகக்கோப்பை தொடரை வெற்றிக் கணக்குடன் தொடங்கியது இந்திய அணி. முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அசத்தல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com