இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|3 வது நாளாக பிரதமர் மோடியின் தியானம் To VJ சித்து மீது புகார்!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, 3 வது நாளாக தொடரும் பிரதமர் மோடியின் தியானம் முதல் VJ சித்து மீது புகார் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
  • கடைசி கட்டமாக 7 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்றுடன் நிறைவு பெறுகிறது மக்களவைத் தேர்தல்.

  • தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு விவாதங்களில் பங்கேற்கப்போவதில்லை என காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில், தோல்வி பயமே காரணம் என மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சனம்.

  • விவேகானந்தர் மண்டபத்தில் 3ஆவது நாளாக தியானம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி. காவி உடையணிந்து, கையில் ருத்ராட்சம், நெற்றியில் விபூதியுடன் தியானம் செய்து வருகிறார்.

  • பிரதமர் மோடிக்காக விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன? என்பது குறித்த பிரத்யேக தகவல்களுடன் புதிய தலைமுறையின் சிறப்புக் காட்சிகள்.

  • பணியிடை நீக்கம் ரத்தான நிலையில் இன்றுடன் ஓய்வு பெறுகிறார் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை. மேலும், 2 வழக்குகளுக்காக பணப்பலன்களில் 5 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.

  • சென்னையை அடுத்த ஆவடியில் நள்ளிரவில் ஒரு வாரமாக இரவு நேரத்தில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • புதுச்சேரியில் மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய இளைஞர் மீது தாக்குதல். காரணம் விபத்தை ஏற்படுத்திவிட்டு காரில் தப்பியோடியதால் பொதுமக்கள் ஆத்திரம்.

  • உ.பி., பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக வெப்பவாதத்தால் ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்த சோகம்.

  • போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக பிரபல யூடியூபர் VJ சித்து மீது புகார் எழுந்தநிலையில், வீடியோ பதிவை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை விளக்கம்.

  • அமெரிக்காவில் நாளை தொடங்குகிறது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்.இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்துடன் மோதல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com