இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | பிரஜ்வல் ரேவண்ணாவின் கைது முதல் வெப்ப வாதத்தால் 10 பேர் மரணம் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பிரஜ்வல் ரேவண்ணாவின் கைது முதல் ஒடிசாவில் வெப்ப வாதத்தால் 10 பேர் உயிரிழப்பு வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
 • ஜெர்மனியிலிருந்து நாடு திரும்பியவரை பாலியல் வழக்கில் சிக்கிய கர்நாடக எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவை பெங்களூரு விமான நிலையத்தில் நள்ளிரவில் சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்தது.

 • கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோயிலில் வழிபாடுக்குப்பின் விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி 45 மணி நேர தியானத்தை தொடங்கினார்.

 • தன்னுடன் விவாதம் நடத்தாமல் மெளன விரதம் இருக்க சென்றுவிட்டார் மோடி என எக்ஸ் வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு ராகுல் காந்தி விமர்சனம்.

 • இறுதி கட்ட மக்களவை தேர்தல் பரப்புரை ஓய்ந்தநிலையில், 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

 • வடமாநிலங்களில் வாட்டி வதைக்கும் வெப்பத்திற்கு ஒரே நாளில் 21 பேர் உயிரிழப்பு. மேலும் வெப்ப வாதம் காரணமாக ஒடிசாவில் 10 பேர் உயிரிழந்த சோகம்.

 • தமிழ்நாட்டில் நேற்று 18 இடங்களில் சதமடித்த வெயில். இந்நிலையில், அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி பாரன்ஃஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது.

 • வெப்ப அலை காரணமாக புதுச்சேரியில் கோடை விடுமுறை நீட்டிப்பு, ஜூன் 6ஆம் தேதிக்கு பதில், 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு.

 • ரிமல் புயல் தாக்கத்தால் வடகிழக்கு மாநிலங்களில் தொடர் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், பிரம்மபுத்திரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

 • சென்னை மேடவாக்கம் சதுப்பு நிலப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு, 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ பரவியதால், கடும் புகைமூட்டம் ஏற்பட்டது.

 • பிரஞ்சு ஓபன் டென்னிஸின் 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார் நடப்பு சாம்பியன் ஜோகோவிச். ஸ்பெயின் வீரரை நேர் செட் கணக்கில் வீழ்த்தி அசத்தல்.

 • யூட்யூபர் டிடிஎஃப் வாசன், ஃபோன் பேசியபடி கார் ஓட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளார்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
“மிகப்பெரிய, உலகம் காணாத வரலாற்று வெற்றியை படைப்பேன்” - நிபந்தனை ஜாமீன் பெற்றபிறகு TTF வாசன் பேச்சு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com