இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|சிலிண்டர் மானிய திட்டம் To வெடிக்கும் தேர்தல் பத்திர விவகாரம்

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது சிலிண்டர் மானிய திட்டம் முதல் தேர்தல் பத்திர விவகாரம் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
 • மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 4 விழுக்காடு உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

 • ஏழை குடும்பங்கள் எரிவாயு சிலிண்டர்கள் வாங்க 300 ரூபாய் மானியம் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவார்கள். மேலும் இதன் மூலம், 10 கோடி பேர் பயன்பெறுவார்கள் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் அளித்துள்ளார்.

 • திருவள்ளூர் அருகே அமைக்கப்பட்ட மிகக்குறைவான நிலக்கரியில் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யும் உயர் தொழில்நுட்ப மின்னுற்பத்தி நிலையத்தினை ஆலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

 • நாட்டின் வளர்ச்சிக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கான செயல் திட்டம் தயார் என்றும், எதிர்க்கட்சிகள் வெறும் விமர்சனங்களையே முன்வைப்பதாகவும் எந்த தீர்வும் தருவதில்லை என்றும் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

 • மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 2 ஆயிரத்து 984 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் 10ஆம் தேதி முதல் நேர்காணல் நடைபெறவுள்ளது. மேலும், அதிமுகவில் விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் வரும் 10,11ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக்கழகம், தமிழ் மாநில முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆதரவு அளித்துள்ளனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் 3 கட்சிகளின் தலைவர்களும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

 • புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதான இருவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 13 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 • சிறுமி மரணத்திற்கு நீதி கேட்டு புதுவையில் இன்று மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப்போராட்டத்திற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், அதிமுகவும் முழு அடைப்பு போராட்டத்தினை அறிவித்துள்ளது.

 • 2 ஆண்டுகளில் 11 ஆயிரத்து 306 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து அழிக்கப்பட்டுள்ளது.மேலும், 18 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டதாக டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கமளித்துள்ளார்.

 • நாமக்கல் அருகே கூலித்தொழிலாளர்களுக்கு போதை மருந்துகளை விற்ற விவகாரத்தில், முக்கிய குற்றவாளியை குஜராத் சென்று கைது செய்தது தமிழக காவல்துறையின் தனிப்படை அமைப்பு.

 • தமிழகத்தில் நீர் நிலை பகுதிகளில் 2 ஆயிரமாவது ஆண்டுக்கு பிறகு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.மேலும், அனைத்து நீர் நிலைகளின் முழு விவரங்கள் கொண்ட இணையதளத்தை ஏற்படுத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 • புகழ் பெற்ற உதகை மலர் கண்காட்சி மே 17ஆம் தேதிதொடங்கி 22ஆம் தேதி வரை 6 நாட்களும், குன்னூர் சிம்ஸ் பூங்கா பழக்கண்காட்சி மே 24 முதல் 26 வரையிலும் நடைபெறும் என்று உதகை ஆட்சியர் அருணா பேட்டிஅளித்துள்ளார்.

 • மதுரையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசுப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று கருக்கலைப்புகளை செய்து வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

 • சாதி மறுப்பு திருமணம் செய்தவரை கொலை செய்ய முயற்சித்த பெண்ணின் பெற்றோரால் ஆணின் சகோதரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 • திருவாரூரில் பயிர் காப்பீடு தொகை வரவு வைக்கப்படாததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.மேலும், உரிய காலத்தில் வழங்காமல் தாமதம் செய்வது ஏன் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

 • குவாரிகளில் மணல் அள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தப்பணி அனுமதி வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. இந்நிலையில்,கனிமவளங்களை காக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 • சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் எல்கேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 • வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்துவதாக பரவும் தகவல்கள் வதந்தி என பல்வேறு மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், குழந்தை கடத்தல் என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பியதாக நாகப்பட்டினத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 • குமரி மாவட்டத்தில் மஹா சிவராத்திரி முன்னிட்டு விமரிசையாக நடைபெறும் சிவாலய ஓட்டத்தில், 12 சிவன் கோயில்களுக்கு ஓடிச்சென்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

 • மாநில அரசை வஞ்சிக்காமல் ஒத்துழைக்கும் மத்திய அரசு வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ள நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 • தமிழகத்தில் 2 முக்கிய சாலை திட்டங்களுக்கு மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தருமபுரி அருகே தொப்பூர் மலைப்பாதை சீரமைப்பு, திருவள்ளூர் - ஆந்திர எல்லை நெடுஞ்சாலை பணிகளுக்கு 2 ஆயிரத்து 300 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகையுடன் இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சி வழங்கப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

 • தேர்தல் பத்திர விவகாரத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பத்திரங்கள் குறித்த தரவுகள் உள்ளதாக முதலில் கூறிவிட்டு தற்போது போதிய தரவுகள் இல்லை என அவகாசம் கேட்பதாக உச்ச நீதிமன்றத்தில் ADR அமைப்பு குற்றச்சாட்டியுள்ளது.

 • யூகோ இந்தியா வங்கிக் கணக்குகளில் 820 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்ட விவகாரத்தில், நாடு முழுவதும் 67 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

 • தர்மசாலாவில் நடைபெறும் 5வது டெஸ்ட் கிரிக்கெடில் முதல் இன்னிங்சில் 218 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com