தலைப்புச் செய்திகள் | ‘தூத்துக்குடியில் பிரதமர்’ முதல் ‘சின்னத்திரை நடிகை மதுமிதா மீது வழக்கு' வரை!

இன்றைய காலை தலைப்பு செய்தியானது தூத்துக்குடியில் பிரதமர் மோடி முதல் சின்னத்திரை நடிகை மதுமிதா மீது 2 பிரிவிகளில் வழக்கு வரை முக்கிய நிகழ்வுகளை தொகுத்து விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்பு செய்திகள்
இன்றைய காலை தலைப்பு செய்திகள்முகநூல்
 • தூத்துக்குடி வெளிதுறைமுக சரக்கு பெட்டக முனையத்துக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி. மேலும் பல்வேறு முக்கிய திட்டங்களையும் தொடங்கி வைக்கவுள்ளார்.

 • காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சிக்காலத்தை விட 3 மடங்கு அதிக நிதி தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பல்லடம் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு.

 • தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்து 417 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும் பெரும்பிடுகு முத்தரையர், ஏ.டி. பன்னீர்செல்வம், இரட்டைமலை சீனிவாசன் உள்ளிட்டோரின் மணிமண்டபங்களும் காணொளியில் திறந்துவைக்கப்படவுள்ளது.

 • திமுக அரசு கிடப்பில் போட்டுள்ள நலத்திட்டங்களை மீண்டும் ஆட்சிக்கு வந்து செயல்படுத்துவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.

 • எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை பிரதமர் மோடி புகழ்ந்து பேசியதை சுட்டிக்காட்டி காட்டிய அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக, பாஜக இடையே ரகசிய உடன்பாடு உள்ளதாக புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி.

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசுகோப்புப் படம்
 • சிறையில் இருந்து விடுவிக்கப்படுவாரா முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி?.. ஜாமின் மனு மீது இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

 • குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து ரோகிணி ராக்கெட்டை ஏவ இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது. ஆகவே சுற்றுவட்டார மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தல்

 • தென்காசி அருகே பெரும் ரயில் விபத்தை சாதூர்யமாக தடுத்த தம்பதியை நேரில் அழைத்து முதலமைச்சர் பாராட்டு. மேலும் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாயும் வழங்கினார்.

 • “பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்ட முயல்வது கூட்டாட்சிக்கு எதிரானது. இந்தசெயல் இருமாநிலங்களின் நட்பிற்கும் ஏற்றதல்ல” என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்றைய காலை தலைப்பு செய்திகள்
பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டுக்கும் ஆந்திர அரசு; தமிழக அரசு எதிர்ப்பு
 • கன்னியாகுமரி அடுத்த குழித்துறையில் மதுபோதையில் இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தகவல் தெரிவித்தும் காவல் துறையினர் அலட்சியம் காட்டியதாக புகார்.

 • வேலூரில் அரசுப் பேருந்தில் இருந்து இறங்கிய மூதாட்டி தவறி விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதற்கு ஓட்டுநரின் அலட்சியப்போக்கே காரணம் என குற்றச்சாட்டு.

 • மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 364 முதல் 374 வரை கைப்பற்ற வாய்ப்பு என்று புதிய தலைமுறை மற்றும் தி ஃபெடரல் இணையதளம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

 • 3 மாநிலங்களில் நடைபெற்ற 15 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் 3 இடங்களில் காங்கிரசும், உத்தரப்பிரதேசத்தில் 8 இடங்களில் பாஜகவும் வெற்றி வெற்றி பெற்றுள்ளனர்.

 • மாநிலங்களவை தேர்தலில் கட்சிமாறி வாக்களித்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் பாஜகவில் சேர திட்டமிட்டுள்ளதால் இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Himachal Pradesh Chief Minister Sukhvinder Singh Sukhu
Himachal Pradesh Chief Minister Sukhvinder Singh Sukhu
 • நாட்டின் எதிர்காலத்திற்கு மோடி அரசு எதிரியாகி விட்டது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

 • டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் 4ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

 • சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மேலும் நெருக்கடி. மற்றொரு வழக்கில் லஞ்சம் பெற்றதாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 • பிரேசில் நாட்டின் பிரேசிலியா நகரில் வெள்ளப்பெருக்கால் மக்கள் அவதியடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதிகள் தீவுகளாக மாறியதால் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 • மும்பை, பரோடா அணிக்கு எதிரான ரஞ்சிக்கோப்பை போட்டியில் மும்பை வீரர்கள் துஷார் தேஷ்பாண்டே, தனுஷ் கொட்டியான் புதிய சாதனை படைத்துள்ளனர். 10, 11ஆவது நிலையில் பேட் செய்ய களமிறங்கி இருவரும் சதம் அடித்து அசத்தல்.

 • மகளிர் ஐபிஎல் தொடரில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி அபார வெற்றி.

 • பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் கைகோர்க்கும் நடிகர் ரஜினிகாந்த். புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது....

 • காரைக்குடியில் தன் மீது அணிவிக்கப்பட்ட சால்வையை எடுத்து கீழே போட்ட விவகாரத்தில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார் நடிகர் சிவக்குமார்.

 • சென்னை சோழிங்கநல்லூர் அருகே சின்னத்திரை நடிகை மதுமிதா ஓட்டிய கார் மோதி காவலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. வேகமாக காரை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக 2 பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய காலை தலைப்பு செய்திகள்
மதுபோதையில் காரை ஓட்டி காவலரை இடித்தாரா பிரபல சீரியல் நடிகை மதுமிதா? உண்மையில் நடந்தது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com