காலை தலைப்பு செய்திகள்|மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் முதல் IPL தொடரில் இருந்து முகமது ஷமி விலகல் வரை

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் முதல் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஐபிஎல் தொடரில் இருந்து விலகவுள்ள தகவல் போன்ற செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
 • மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் இன்றும், நாளையும் ஆலோசனை நடைபெறவுள்ளது. இதில் சென்னையில் உள்ள அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர்.

 • காங்கிரஸ் கட்சி தன்னை சாதியை கூறி இழிவுபடுத்துவதையே இலக்காக கொண்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கடும் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

 • மக்களவைத் தேர்தலில் டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே உடன்பாடு நடைப்பெற்றதில், ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிட ஒப்பந்தம்.

 • மக்களவை தேர்தலில் டெல்லி, பஞ்சாப், மற்றும் ஹரியானாவில் வெற்றி யாருக்கு? என புதிய தலைமுறை - தி ஃபெடரல் இணையதளம் நடத்திய மெகா கருத்துக்கணிப்பில் முடிவுகள் வெளியாகியுள்ளது.

 • ஹரியானா காவல்துறையினர் கடும் நெருக்கடிகளை தருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். போராட்டக் களத்தில் இருந்து புதிய தலைமுறை நேரடி தகவல்கள்.

 • அரிசி விலை அடுத்து வரும் மாதங்களில் குறையும் என மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 • தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாதுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க முடியாது என சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.

 • கோவையில் கலைஞர் நூலகம் எப்போது அமைக்கப்படும் என பேரவையில் கேள்வி எழுப்பிய வானதி சீனிவாசனுக்கு மதுரை எய்ம்ஸ் போல் இல்லாமல் விரைவில் செயலாக்கத்துக்கு வரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

 • நெய்வேலியில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

 • நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப்பெற வேண்டும் என காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்.

 • பெண்களை தவறாக பேசுவது என்பதே குற்றம் என த்ரிஷா விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

 • சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியா? நிர்வாகிகள் விரும்புவதாக, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேட்டியளித்துள்ளார்.

 • திருவண்ணாமலை அருகே மேல்மாவில் சிப்காட் திட்டத்தை கைவிடக்கோரி முதலமைச்சரிடம் நேரில் வலியுறுத்த வந்த விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 • நோயாளிகளுக்கு புரியும் வகையில் மருந்துச் சீட்டை எழுதித்தர வேண்டும் என மருத்துவர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 • ராமேஸ்வரம் மீனவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தினை அறிவித்துள்ளனர். இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தல்.

 • பழங்குடியினர் பட்டியலில் மெய்த்தி சமூகத்தை சேர்ப்பதற்கான பரிந்துரை நீக்கம். மணிப்பூர் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

 • சிலிகுரி வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள சீதா, அக்பர் சிங்கங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு z பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

 • ஓடிசாவில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேய பாண்டியன் மீது தக்காளி வீசியவர் மீது பிஜூ ஜனதா தளம் தொண்டர்கள் சரமாரி தாக்குதல்.

 • வங்கதேசம், மொரிஷியஸ், பஹ்ரைன், பூட்டானுக்கு மட்டும் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

 • ரஷ்யாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கவனம் ஈர்க்கும் அதிபர் புடின். அணுகுண்டு வீசும் விமானத்தில் பறந்து சென்று அதிரடி.

 • காசாவில் இஸ்ரேலிய படைகள் வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

 • இந்தியா - இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ராஞ்சி மைதானத்தில் இன்று தொடங்குகிறது...

 • முதல் 21 போட்டிகளுக்கான ஐபிஎல் தொடர் அட்டவணை வெளியீடு. மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் பெங்களூரு - சென்னை அணிகள் மோதுகின்றன.

 • கணுக்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால் ஐபிஎல் தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகவுள்ளதாக தகவல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com