தலைப்புச் செய்திகள்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு முதல் அண்ணாமலை சபதம் வரை
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் காலமானார்... உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது...
டெல்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங் உடலுக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்... தனது வழிகாட்டியை இழந்துவிட்டதாக ராகுல் காந்தி உருக்கம்...
மன்மோகன்சிங் மறைவையொட்டி, இன்றைய மத்திய அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது... காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடவுள்ள நிலையில், 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இழந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்... எளிய பின்னணியில் இருந்து வந்து பொருளாதார நிபுணராக உயர்ந்தவர் மன்மோகன்சிங் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் தகவல் தெரிவித்துள்ளார்...
மன்மோகன் சிங் மறைவையொட்டி காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகள் அடுத்த 7 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது... கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
இந்திய பொருளாதாரத்தை கட்டமைத்ததில் மன்மோகன் சிங்கின் பங்கு மிக முக்கியமானது என குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு புகழாரம் சூட்டியுள்ளார்... மன்மோகன் மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர், மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்...
பிரதமர் என்பதையும் தாண்டி தமிழ்நாட்டு மக்களுக்கு நண்பராக விளங்கியவர் மன்மோகன் சிங்.... மன்மோகனின் அறிவாற்றலும் தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு பெற்ற திட்டங்களும், அடைந்த வளர்ச்சியும் அதிகம் என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்... எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி கர்நாடகாவிற்கு இன்று அரசு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது... 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை புகாரில் மேலும் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது... சட்டவிரோதமாக சிறை வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளை கூடுதலாக சேர்த்தது காவல்துறை...
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். திமுக அரசின் காவல் துறை விசாரிக்க தார்மீகத் தகுதியில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் FIR வெளியானது எப்படி? என்பது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார்.
ஞானசேகரன் செல்போனில் பேசியபோது சார் என்று குறிப்பிட்டது யாரை?... புதிய தலைமுறை செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு காவல் ஆணையர் அருண் பதில்...
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை காலணி அணியப் போவதில்லை என அண்ணாமலை சபதம்.... காலை 10 மணிக்கு தனக்கு தானே சாட்டையால் அடித்துக் கொள்ளப் போவதாகவும் பேட்டி...
அதிமுக எதிர்க்கட்சி அல்ல; பாஜகதான் எதிர்க்கட்சி என காட்டிக்கொள்ள அண்ணாமலை முயற்சிக்கிறார்... தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டம் தேவையற்றது என்றும் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
பொங்கல் இலவச வேட்டி, சேலையை ஜனவரி 10 ஆம் தேதிக்குள் ரேஷன் கடைக்கு அனுப்ப வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழ்நாடு கைத்தறித்துறை அறிவித்துள்ளது.
கலை, கலாசாரம், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கிய 17 சிறுவர்களுக்கு கவுரவம்... பிரதமரின் பால புரஸ்கார் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு...
மெல்போர்னில் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் புதிய சாதனை... முதல் நாளில் போட்டியை நேரில் காண அதிக அளவு திரண்ட ரசிகர்கள்...
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கொன்ஸ்டாஸூடன் மோதல்... இந்திய வீரர் விராட் கோலிக்கு ஊதியத்தில் இருந்து 20 விழுக்காடு அபராதம்...