தலைப்புச் செய்திகள் | பறவை மோதி விபத்திற்குள்ளான விமானம் முதல் மீண்டும் அணியில் வாஷிங்டன் வரை!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை புகாரில், பிரியாணி கடை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக வளாக அடர்ந்த வனப்பகுதியில் தனிமையில் பேசும் காதலர்களை மிரட்டி பாலியல் சீண்டலில் இவர் ஈடுபட்டு வந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கைதான ஞானசேகரன் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. காவல் துறையினரிடம் இருந்து தப்பிச்செல்லும்போது கீழே விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் திமுகவை சேர்ந்தவர் என்பது பொய் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கோவி.செழியன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
போதைப் பழக்கம்தான் குற்றச்செயல்களை அதிகரிக்க முக்கிய காரணம் என விசிக தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார். கல்வி நிலையங்கள், விடுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
டங்ஸ்டன் சுரங்க ஏல உரிமையை வழங்க தமிழக அரசு கோரியுள்ளதை மத்திய அரசு அம்பலப்படுத்தியுள்ளது என்றும் திமுக அரசின் நாடகங்கள் வெட்ட வெளிச்சமாகியுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
டங்ஸ்டன் ஏலத்தை தமிழக அரசு எதிர்க்கவில்லை என்ற மத்திய அரசின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் துரைமுருகன் மறுப்பு தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் தலையீட்டைத் தொடர்ந்தே மறு ஆய்வுக்கு மத்திய அரசு பரிந்துரைத்ததாகவும் விளக்கம் விளக்கமளித்துள்ளார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்து சீனிவாசன் விலகினார். அல்ட்ராடெக் சிமெண்ட்ஸின் துணை நிறுவனமாக இந்தியா சிமெண்ட்ஸ் மாறிய நிலையில் ராஜினாமா முடிவு செய்துள்ளார்.
பிரபல மலையாள எழுத்தாளர் வாசுதேவன் நாயர் காலமானார்.... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அந்தியூர் அருகே 105ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய மூதாட்டி.... 20க்கும் மேற்பட்ட பேரன், பேத்திகள் என உறவினர்கள் புடைசூழ நடந்த விழா...
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியது பாக்சிங் டே டெஸ்ட். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது ஆஸ்திரேலிய அணி.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியிலிருந்து சுப்மன் கில் நீக்கம். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு மீண்டும் வாய்ப்பு.
ஆப்கானிஸ்தானில் நுழைந்து பாகிஸ்தான் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியது. பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் அகதிகள் 46 பேர் உயிரிழந்தனர்.
கஜகஸ்தான் நாட்டில் அஜர்பைஜான் விமானம் விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். பறவை மோதியதால் கோளாறு ஏற்பட்டு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது.
உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் சந்தித்து பாராட்டினார் நடிகர் சிவகார்த்திகேயன். குகேஷிற்கு கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தும் நடிகர் வாழ்த்து தெரிவித்தார்.
சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் ரெட்ரோ திரைப்படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டது படக்குழு