தெலங்கானாவை தொழில்துறையில் உயர்த்திய  ’கே.டி.ஆர்’ பிறந்தநாள்!

தெலங்கானாவை தொழில்துறையில் உயர்த்திய ’கே.டி.ஆர்’ பிறந்தநாள்!

தெலங்கானாவை தொழில்துறையில் உயர்த்திய ’கே.டி.ஆர்’ பிறந்தநாள்!
Published on

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகனும் நகராட்சி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, தொழில்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத் துறையின் அமைச்சருமான கே.டி. ராமா ராவ் என்றழைக்கப்படும் கே.டி.ஆரின் 44 வது பிறந்தநாள் தெலங்கானா மற்றும் ஆந்திராவில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ராஷ்டிரிய சமிதி கட்சியியின் செயல்தலைவராக இருக்கும் ராமாராவை கே.டி.ஆர் என்றே அன்போடு அழைக்கிறார்கள் மக்கள். (தமிழக கே.டி.ஆர் அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி நினைவுக்கு வருகிறாரா?)  

சமீபத்தில், கொரோனாவால் தெலங்கானாவில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு உதவுமாறு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கே.டி.ஆருக்கு கோரிக்கை வைத்திருந்தார். உடனடியாக, அவரது கோரிக்கையை ஏற்று ”12 கிலோ அரிசியும்,  500 ரூபாய் உதவித்தொகையும் கொடுத்து உதவிக்கரம் நீட்டினார்” கே.டி.ஆர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர், கொரோனா ஆரம்பித்ததிலிருந்தே உதவிக்கேட்டு கோரிக்கை வைப்பவர்களின் பிரச்சனைகளுக்கும் உதவி வருகிறார். இதனைப் பார்த்துதான் மற்ற மாநில அரசியல் தலைவர்களும் சமூக வலைதளங்கள் வழியே கோரிக்கை வைப்பவர்களுக்கு உதவத் தொடங்கினார்கள்.

அதேபோல, தொழில்துறையில் தெலங்கானா மாநிலம் இந்தியாவில் தொழில்துறையில் அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது என்றால், அதற்கும் கே.டி.ஆர்தான் காரணமாகச் சொல்லப்படுகிறார். மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கடந்த ஆண்டு தொழில்துறையில் மூன்றாம் இடம் பிடித்திருந்தது. ஏனென்றால், அந்தத் துறையின் அமைச்சர் அவர்தான்.

 இன்று அவரது பிறந்தநாளையோட்டி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, நடிகை ரோஜா, ராம் சரண், விளையாட்டு வீரர்கள் சாய்னா நேவால், லக்‌ஷ்மணன், தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா உள்ள ஏராளமானோர் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

 ”எனது அன்பு சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் ஏராளமான மகிழ்ச்சியையும் அளிப்பார்" என்று ட்விட் போட்டுளார், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. 

 ”இந்த கடினமான காலக்கட்டத்தில் நீங்கள் அற்புதமான வேலையை செய்கிறீர்கள். பிறந்தநாள் வாழ்த்துகள்” என்றிருக்கிறார், ராம் சரண்

 ”இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு நல்ல நேரம் கிடைக்கும்படி பிரார்த்திக்கிறேன். உங்கள் சக்தியால் நீங்கள் பெரிய விஷயங்களை அடைவீர்கள் என்று நம்புகிறேன்.நீங்கள் விரும்பும் அனைத்தையும் நான் விரும்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்றிருக்கிறார், விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால்   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com