“இந்த நகருக்கு மட்டுமே உரிய சிறப்பு இது!”- திருப்பதி 893வது பிறந்தநாளில் MLA பெருமிதம்

“இந்த நகருக்கு மட்டுமே உரிய சிறப்பு இது!”- திருப்பதி 893வது பிறந்தநாளில் MLA பெருமிதம்
“இந்த நகருக்கு மட்டுமே உரிய சிறப்பு இது!”- திருப்பதி 893வது பிறந்தநாளில் MLA பெருமிதம்

இன்று திருப்பதிக்கு 893வது பிறந்தநாள் ஆகும். iதையொட்டி இன்று பல சிறப்பு பூஜைகள் நடந்தன.

கடந்த 1130ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சாமி கோவிலை கட்ட பூமி பூஜை செய்து நான்கு மாட வீதிகள் அமைக்கவும், கோவில், கோவிலைசுற்றி அக்ரஹாரம் ஆகியவற்றை கட்டவும் ராமானுஜர் அடிக்கல் நாட்டினார். அப்போது முதல் திருப்பதி என்ற பெயரில் நாட்டின் புண்ணிய சேத்திரமான திருப்பதி படிப்படியாக அபிவிருத்தி அடைய துவங்கியது.

எனவே இன்று திருப்பதிக்கு 893 வது பிறந்தநாள் ஆகும்.  தன்னுடைய 892 ஆம் வயது வரை புண்ணிய சேத்திரம் என்ற பெயருடன் மட்டுமே இருந்த திருப்பதி 893வது பிறந்தநாளில் திருப்பதி மாவட்டமாக மாறியுள்ளளது. இந்த நிலையில் நகரின் 893வது பிறந்த நாளை முன்னிட்டு ராமானுஜர் பூமி பூஜை செய்த கோவிந்தராஜ சுவாமி கோவிலில் திருப்பதி சட்டமன்ற உறுப்பினர் கருணாகர் ரெட்டி தலைமையில் கோவிந்தராஜ சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் திருப்பதி நகருக்கு அடிக்கல் நாட்டிய ராமானுஜ ஆச்சாரியார் சிலைக்கு கோவில் வளாகத்தில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து கோவில் நான்கு மாட வீதிகளில் பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள், பக்தி கோஷம் ஆகியவற்றிற்கு இடையே ராமானுஜ ஆச்சாரியார் படம் வரையப்பட்ட பதாகைகளை தாங்கி, திருப்பதி சட்டமன்ற உறுப்பினர் கருணாகர் ரெட்டி, மேயர் சிரிஷா ஆகியோர் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது.

இந்த நிலையில் அங்கு பேசிய திருப்பதி சட்டமன்ற உறுப்பினர் கருணாகர் ரெட்டி, “சிந்து சமவெளி நாகரிக நகரங்கள் துவங்கி உலகில் தற்போதும் இருக்கும்  எந்த நகருக்கும் பிறந்தநாள் என்று ஒன்று இருக்காது.  ஆனால் திருப்பதிக்கு மட்டும் பிறந்தநாள் உள்ளது. ஏற்கனவே உலக அளவில் புகழ்பெற்ற புண்ணி ஷேத்திரம் என்ற புகழுடன் விளங்கும் திருப்பதிக்கு பிறந்தநாள் என்று ஒன்று இருப்பது இந்த நகருக்கு மட்டுமே உரிய மற்றொரு சிறப்பாகும்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com