ஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. சசிகலா விடுதலை.. இன்னும் சில முக்கியச் செய்திகள்!

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. சசிகலா விடுதலை.. இன்னும் சில முக்கியச் செய்திகள்!
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. சசிகலா விடுதலை.. இன்னும் சில முக்கியச் செய்திகள்!

தடியடி, கண்ணீர் புகைக்குண்டுகளை மீறி டெல்லி செங்கோட்டையில் நுழைந்த விவசாயிகள். டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் உயிரிழப்பு

டெல்லி வன்முறை குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை. 86 காவல்துறையினர் காயமடைந்ததாக தகவல், கூடுதல் துணை ராணுவப் படையினர் குவிப்பு.

செங்கோட்டையில் மதக் கொடி ஏற்றப்பட காரணமாக இருந்த பஞ்சாப் நடிகர் தீப் சிங். உரிமையை நிலைநாட்ட ஜனநாயக முறைப்படி கொடியை ஏற்றி போராடியதாக விளக்கம்.

வன்முறை எந்தப் பிரச்னைக்கும் தீர்வல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து. தேசிய நலன் கருதி 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும் வலியுறுத்தல்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டம். டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்களில் டெல்டா மாவட்டங்களில் பேரணி

வேளாண் சட்டங்கள் இயற்றப்பட அதிமுகவே காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கருத்து.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று திறப்பு. காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து இன்று காலை விடுதலையாகிறார் சசிகலா. மருத்துவமனையில் இருந்து நேரடியாக விடுவிக்கப்படுகிறார்.

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில் மாற்றம் கொண்டு வர பரிசீலனை. குறைந்த காலகட்டத்தில் தேர்வுக்கு தயாராவதால் வினாத்தாளை எளிதாக்க கருத்து கேட்பதாக அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

சென்னையில் பிரபல நகைக்கடையில் 5 கிலோ நகைகள் கொள்ளை. பணியாளர் மீது காவல் நிலையத்தில் புகார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com