முக்கிய செய்திகள்:ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் முதல் கடம்பூர்ராஜூ முன்ஜாமீன் மனு வரை

முக்கிய செய்திகள்:ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் முதல் கடம்பூர்ராஜூ முன்ஜாமீன் மனு வரை
முக்கிய செய்திகள்:ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் முதல் கடம்பூர்ராஜூ முன்ஜாமீன் மனு வரை

* முதல்வர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக இன்று மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க திமுக எம்பி ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது.

* சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

* உண்மையான ஜல்லிக்கட்டு கதாநாயகன் பிரதமர் நரேந்திர மோடிதான் என்றும், 24 மணி நேரத்தில் நான்கு துறைகளின் அரசாணைகளை தந்து அதற்கான தடையை உடைத்தெறிந்தார் எனவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்.

* பிரதமர் நரேந்திர மோடி பொய்யை மட்டுமே பேசி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ராஜபாளையத்தில் பரப்புரை மேற்கொண்ட ஸ்டாலின், டெல்லியில் போராடும் விவசாயிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசினாரா? என்றும் அந்த விவசாயிகளை பார்த்து தரகர் என்று கொச்சைப்படுத்தியவர் தான் முதல்வர் பழனிசாமி எனவும் குறிப்பிட்டார்.

* பாஜகவின் தேர்தல் பரப்புரையில் தம்முடைய படம் பயன்படுத்தப்பட்டது அபத்தமானது என பரதநாட்டியக் கலைஞரும், மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மருமகளுமான ஸ்ரீநிதி ட்வீட் செய்துள்ளார்.

* புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்வதற்கு திமுகதான் காரணம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

* இலவசங்களை கொடுத்து உழைக்காமல் வாழ்வதற்கு மக்களை தயார் செய்வது இழிவானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

* புயல்களால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு 4 சதவிகிதம் மட்டுமே நிவாரண தொகையை மத்திய அரசு ஒதுக்கியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். 

* ஆட்சியாளர்களின் திட்டங்களை கூட அறியாமல் சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்வது தான் திமுக என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.

* நல்லவர்கள் அமைத்த கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். 

* அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சசிகலா மறைமுகமாக கூறியுள்ளதாகவும், தேர்தலுக்குப் பிறகு டிடிவி தினகரனுக்கு சில வேண்டுகோளை வைப்போம் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

* திருச்சியில் காவல்நிலையங்களில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தில் காவல் ஆணையர் லோகநாதன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணியை முறையாக செய்யவில்லை என பொன்மலை சரக உதவி ஆணையர் தமிழ்மாறன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

* மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் வரும் 1 ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நிறைவடைந்தது. மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி களம் காணும் நந்திகிராம் தொகுதியிலும் 2 ஆம் கட்ட தேர்தலில் வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது.

பறக்கும் படை அதிகாரிகளை ஒருமையில் பேசி மிரட்டியதாக கடம்பூர் ராஜு மீது புகார்; செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

* சேப்பாக்கம் - திருவல்லிகேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதிக்கு ஆதரவாக அவரது தாயார் துர்கா ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com