முக்கிய செய்திகள்: பிரதமரின் தமிழக வருகை முதல் சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் மீட்பு வரை!

முக்கிய செய்திகள்: பிரதமரின் தமிழக வருகை முதல் சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் மீட்பு வரை!
முக்கிய செய்திகள்: பிரதமரின் தமிழக வருகை முதல் சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் மீட்பு வரை!

* தமிழக சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகிறார். தாராபுரம் தொகுதியில் நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, அத்தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு திரட்டுகிறார். இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்கிறார்.

* முதல்வர் பழனிசாமியின் பக்கம், இயற்கையோ, இறைவனோ, மக்களோ இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட அவர், சாமி சிலையை கடத்தியவர்களை காப்பாற்றியவர்களுக்கு கடவுள் எப்படி துணையிருப்பார் என்றும் கேள்வி எழுப்பினார்.

* அரசியலுக்கு தாமதமாக வந்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் ஆட்சி மக்களின் ஆட்சியாக இருக்கும் என்று கூறிய அவர் ஏப்ரல் 6 ஆம் தேதி மாற்றத்துக்கான விதையைத் தூவுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

* அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்திக்கு சொந்தமான இடங்களில் 3 நாட்கள் நடந்த சோதனையில் 11 கோடி ரூபாய் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கணக்கில் வராத வருமானம் தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறும் அதிகாரிகள் இளங்கோவனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

* உலகின் முக்கியக் கடல்வழியான சூயஸ் கால்வாயை மறித்துக் கொண்டிருந்த எவர் கிவ்வன் கப்பல் நகர்த்தப்பட்டிருப்பதால், விரைவில் போக்குவரத்து தொடங்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. இயற்பியல் விதிகளின் அடிப்படையிலேயே எவர் கிவன் கப்பல் நகர்த்தப்பட்டதாக அப்பணியை மேற்கொண்ட நெதர்லாந்து நாட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஸ்மித் சால்வேஜ் கூறியுள்ளார்.

* முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்த பேச்சுக்கு திமுக எம்.பி. ஆ.ராசா பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமது பேச்சால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்கலங்கினார் என்பதற்காக அடிமனதின் ஆழத்திலிருந்து வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.

* அதிமுகவினர் பணத்துடன் கூட்டணி அமைத்திருப்பதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் சொத்துகளையும் சூறையாடுவார்கள் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் பரப்புரை செய்த தினகரன், இரு கட்சிகள் மீதும் சரமாரியாக விமர்சித்தார்.

* முதலமைச்சர், துணை முதல்வர் ஆகியோர் குறித்து அவதூறாக பேசியதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிடி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

* திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார். கள நிலவரங்களே கருத்து கணிப்புகளில் பிரதிபலிக்கின்றன என்றும் திமுக மற்றும் அதன் கூட்டணி சிறப்பான முறையில் செயல்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com