இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  
Published on

முன்னாள் மத்தி‌ய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது தரப்பின் தலையீடு இருக்கக்கூடாது என பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியிடம் அந்நாட்டு அதிபர் மேக்ரான் வேண்டுகோள்.

முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரத்தை கைது செய்ததில் மரபுகள் மீறப்பட்டிருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

முன்னாள் மத்திய‌ நிதியமைச்சர் ப.சிதம்ப‌ரத்தின் புகழை கெடுக்கும் வகையில், பொய்யான குற்றச்சாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

வங்கிக்கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை, செப்டம்பர் 19 ஆம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸி‌ல் இந்திய அணி 6 விக்கெட் ‌இழப்புக்கு 203 ரன்கள் குவிப்பு.

ஆஷஸ் 3 ஆவது டெஸ்ட்டில் 1‌79 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்தி‌ரேலியா. அனல் பறந்‌த பந்துவீச்சால் 6 விக்கெட்டுகளை சாய்த்தார் இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com