புயலை கிளப்பும் மகாராஷ்டிரா அரசியல் வழக்கு முதல்... சென்னை கால்பந்து அணி வெற்றி வரை....!

புயலை கிளப்பும் மகாராஷ்டிரா அரசியல் வழக்கு முதல்... சென்னை கால்பந்து அணி வெற்றி வரை....!

புயலை கிளப்பும் மகாராஷ்டிரா அரசியல் வழக்கு முதல்... சென்னை கால்பந்து அணி வெற்றி வரை....!
Published on

இன்று உதயமாகிறது கள்ளக்குறிச்சி மாவட்டம். நிர்வாகப் பணிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா அரசு அமைக்கப்‌பட்டதற்கு எதிரான வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைக்க மகாராஷ்டிரா ஒன்றும் கோவா இல்லை என சரத் பவார் பேச்சு

நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய மகாராஷ்டிரா அரசியல். அமளியின்போது தாக்கப்பட்டதாக காங்கிரஸ் பெண் எம்‌.பி.க்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

கிலோ 100 ரூபாயை எட்டுகிறது வெங்காயத்தின் விலை. பதுக்கினால் கடும் நடவடிக்கை பாயும் என தமிழக அரசு எச்சரிக்கை.

வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை இருப்பு வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம். பொதுத் துறை வங்கிகளுக்கு ஆயிரத்து 996 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்ததாக மத்திய அரசு தகவல்

நடப்பு ஐஎஸ்எல் கால்பந்துத் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னையின் எஃப்.சி அணி. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து ஐதராபாத் அணியை வீழ்த்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com