
நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் வருகிற 3-ஆம் தேதி தூக்கு தண்டனை. டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் ஐந்தாவது நாளாகத் தொடரும் போராட்டம். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை திரும்பப் பெறப்போவதில்லை என இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு.
சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர். விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமலேயே நிராகரிப்பது சரியான நடைமுறையல்ல எனக்கூறி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.
வதந்தி பரப்பி வண்ணாரப்பேட்டை போராட்டம் தூண்டிவிடப்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு. உண்மைக்கு மாறான தகவல்களை கூறுவதாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் தொடரும் முறைகேடு புகார். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் நேரில் ஆஜராக சிபிசிஐடி சம்மன்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதன்கிழமை தமிழக அமைச்சரவை கூட்டம். காவிரி டெல்டா பகுதிகள் வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கு ஒப்புதல் தரப்படும் என்று தகவல்.
கொரோனா வைரஸ் பரவி இன்றுடன் 50 நாட்கள் ஆகியும் குறையாத உயிரிழப்பு. உலகம் முழுவதும் 71ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.
இந்திய ராணுவத்தில், படைகளை பெண்கள் வழிநடத்த உச்சநீதிமன்றம் அனுமதி. மத்திய அரசின் மனநிலை மாறவேண்டும் என நீதிபதிகள் கருத்து.
விளையாட்டு உலகின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான லாரியஸ் விருதை வென்றார் சச்சின். சிறந்த வீரருக்கான விருது மெஸ்சிக்கும், கார்பந்தய வீரர் ஹேமில்டனுக்கும் பகிர்ந்து அளிப்பு.