மாணவர்கள் போராட்டம் முதல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார  வெற்றி வரை 

மாணவர்கள் போராட்டம் முதல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார வெற்றி வரை 

மாணவர்கள் போராட்டம் முதல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார வெற்றி வரை 
Published on

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறை தடியடி.

காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர் அமைப்பினர். பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் விடியவிடிய போராட்டம்.

குடியுரிமை திருத்த சட்டத்தில் காங்கிரஸ் தேவையற்ற பிரச்னைகளை உருவாக்குவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு. தேவைப்பட்டால் குடியுரிமை திருத்த சட்டத்திருத்தத்தில் மீண்டும் திருத்தம் செய்யப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி.

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இளைஞர்கள் குரலை பிரதமர் மோடி கேட்க வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தல். போராட்டங்களை கவனத்தில் கொண்டு சட்டத்தை மறுபரிசீலனை செய்ய மு.க. ஸ்டாலின் கோரிக்கை.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை இறுதி செய்வதில் அதிமுக, திமுக தீவிரம்.

வருகிற 19ஆம் தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தமிழக திட்டங்களுக்கு நிதியை விடுவிக்க பிரதமரிடம் நேரில் வலியுறுத்தவுள்ளதாக தகவல்.

சென்னையில் நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தீவுகள் அணி வெற்றி. ஹெட்மயரின் அதிரடி சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com