பாஜக தலைமை அலுவலகம் முற்றுகை முதல் ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து வரை... முக்கியச் செய்திகள்

இன்றைய முக்கியச் செய்தியில், பாஜக தலைமை அலுவலகத்தை நோக்கி ஆம் ஆத்மி கட்சியின் முற்றுகை முதல் பெங்களூருவில் இருந்து கொச்சி சென்ற ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜினில் ஏற்பட்ட தீ விபத்து வரை உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்துகொள்வோம்.
முக்கியச் செய்திகள்
முக்கியச் செய்திகள்ஃபேஸ்புக்
  • டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதேநேரத்தில், பேரணியாக சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

  • அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

  • கனமழை எச்சரிக்கை காரணமாக 2 கோடி பேருக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று மாநில பேரிடர் மேலாண்மைத்துறை விளக்கமளித்துள்ளது.

  • விடுமுறை தினத்தையொட்டி உதகை, ஒகேனக்கல் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

  • ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடியில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், கிளை நிறுவனம் நடத்தி 134 கோடி ரூபாய் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.

  • வடபழனி முருகன் கோயிலில் நடைபெற்ற வைகாசி தேரோட்டத்தில், வடம் பிடித்து இழுத்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

  • வேலூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடைபெற்ற வழிப்பறி முயற்சியில், பாஜகவைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்.

  • பெங்களூருவில் இருந்து கொச்சி சென்ற ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதில், 179 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.

  • தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை சாம்பியன். பாங்காக்கில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சீன இணையை வீழ்த்தி அசத்தல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com