ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முதல்.. இந்திய அணியின் கட்டாய நிலை வரை..! #TopNews

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முதல்.. இந்திய அணியின் கட்டாய நிலை வரை..! #TopNews

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முதல்.. இந்திய அணியின் கட்டாய நிலை வரை..! #TopNews
Published on

டெல்லியில் இன்று கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம். அரசின் வருவாயை அதிகரிக்க வரி விகிதங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்பு.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் மீண்டும் வன்முறை. கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தொடர்கிறது எதிர்ப்பு.

இஸ்லாமியர்கள் மத்தியில் காங்கிரஸ் அச்ச உணர்வை ஏற்படுத்துவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு. மறைந்திருந்து தாக்கும் கொரில்லா அரசியல் வேண்டாம் என்று எச்சரிக்கை.

ரயில்வே சொத்துகளை சேதப்படுத்துவோரை கண்ட‌தும் சுட்டுத்தள்‌ளவும். பா‌துகாப்பு படையினருக்கு ரயில்வே இணை ‌அமைச்சர் அறிவுறுத்‌தல்.

தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியது. ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 6 லட்சம் பேர் அதிகம்.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே விசாகப்பட்டினத்தில் இன்று 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி. தொடரை இழக்காமலிருக்க இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com