தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தீர்ப்பு முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் வரை..! #TopNews

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தீர்ப்பு முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் வரை..! #TopNews

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தீர்ப்பு முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் வரை..! #TopNews
Published on

கொரனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 212-ஆக அதிகரிப்பு. அச்சம் காரணமாக பொது சுகாதார அவசர நிலையை அறிவித்தது உலக சுகாதார அமைப்பு.

சீனாவில் இருந்து வந்த கேரளா மாணவிக்கு கொரனா வைரஸ் பாதிப்பு. தமிழகத்திலும் முன்னெச்சரிகை நடவடிக்கைகள் தீவிரம்.

தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பான வழக்கு. தீர்ப்பை இன்று அறிவிக்கிறது உயர்நீதிமன்றம்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம். அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கத் தயார் என பிரதமர் உறுதி.

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு. துப்பாக்கிச்சூட்டை கண்டித்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டம்.

துரோகிகளை சுட்டுத்தள்ளுங்கள் என்று பேசிய விவகாரம். மத்திய இணையமைச்சர் அனுராக் தாகூர் பரப்புரை செய்ய 3 நாட்கள் தடை.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதால் வங்கிச் சேவை பாதிக்கப்பட வாய்ப்பு

விஸ்வரூபம் எடுக்கும் குரூப் 4 முறைகேடு விவகாரம். இடைத்தரகர் ஜெயக்குமார் குறித்து தகவல் அளித்தால் சன்மானம் என அறிவிப்பு

வெற்றியை தொடருமா இந்திய கிரிக்கெட் அணி. நியூசிலாந்து அணியுடன் 4-ஆவது ட்வெண்டி ட்வண்டி போட்டியில் மோதல்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com